அக்னி திசை நோக்கி அமர்ந்திருக்கும் சேலம் கோட்டை மாரியம்மன்

Image result for kottai mariammanசூரிய சந்திர கிரகணங்களில் கோயில்கள் பூட்டப்படுவது வழக்கம். ஆனால், கோட்டை மாரியம்மன் ஆலயம் பூட்டப்படாது. சூரிய சந்திர கிரகண கதிர்களால் வரும் பாதிப்பிலிருந்து காக்கிறாள் என்றும் சொல்கிறார்கள்.

ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம். அக்னி திசை நோக்கி அமர்ந்திருக்கிறாள். வலது காலை ஊன்றி, இடது காலை மடக்கி வீராசனத்தில் வீற்றிருக்கிறாள். பெரிய மாரியம்மனின் கண்களும், பலி பீடத்திலுள்ள அம்மனின் கண்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது சிறப்பாகும்.

பக்தர்கள் வீட்டில் அம்மை வார்த்திருக்கும் நேரத்தில் அம்மையின் வெம்மையை குறைக்க பலி பீடத்தில் வேப்பிலை கலந்த நீரை ஊற்றி அம்மனை குளிர வைப்பார்கள். உப்பு, பருப்பு, மிளகு, வெங்காயம் போன்றவற்றை பிரார்த்தனை பொருட்களாக செலுத்துகின்றனர். கண்வலி, நெஞ்சுவலி போன்ற உபாதைகள் தீர கண் மலர், மண் உரு, கை, கால், முகம் போன்ற பிரதிமைகளை பிரார்த்தனை பொருட்களாக செலுத்துகின்றனர்.

சேலம் மாநகரின் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகிலும், ரயில் நிலையத்திலிருந்து ஐந்து மைல் தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com