அதிசய விநாயகர் கோவில் சித்திரை திருவிழா இன்று தொடங்குகிறது

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அம்பாள்நகர் அதிசய விநாயகர் கோவில் சித்திரை திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.35 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.

தினமும் காலை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள், சந்தனக்காப்பு, புஷ்பாஞ்சலி, லட்சார்ச்சனை, மாலை 5.30 மணிக்கு அதிசய விநாயகர் வீதிஉலா ஆகியன நடக்கிறது.

10-ந் திருநாளான 18-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு மின்னொளி அலங்காரத்தில் அன்னை அம்பாள் தேவியின் தேரோட்டம் நடைபெறும். இதையொட்டி அன்று இரவு விநாயகர் அன்னதான மண்டபத்தில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை தேவார வகுப்பு மாணவ-மாணவிகளின் பக்தி இன்னிசை, 8 மணிக்கு சமய மாநாடு, 10 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் ஆகியன நடக்கிறது. ஏற்பாடுகளை திருவிழா திருப்பணி குழுவினரும், அதிசய விநாயகர் ஆலய நிர்வாக சங்கத்தினரும் செய்து வருகின்றனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com