அத்தி மரத்தால் ஆன தெய்வச் சிலைகள்

அத்தி மரத்தால் ஆன தெய்வச் சிலைகள்
* திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள படவேடு ரேணுகாம்பாள் அம்மன் முழு உருவச்சிலை அத்தி மரத்தால் ஆனது.
Image result for உடுப்பி கிருஷ்ணன்
* உடுப்பி கிருஷ்ணன் சிலை அத்தி மரத்தில் செய்யப்பட்டது.

* புதுவைக்கு அடுத்த வீராம்பட்டினம் என்ற மீனவ கிராமத்தில் கடலில் மிதந்து வந்த அத்தி மரத்தை செங்கேணி அம்மன் சிலையாக வடித்து வழிபடுகிறார்கள். இவ்வூரில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா பிரெஞ்சு காலத்தில் இருந்து புகழ் பெற்றது.

* திருமலையில் (திருப்பதி) தல தீர்த்தமாகிய குளத்திலும் அத்தி வரதர் எழுந்தருளிஉள்ளார்.
Related image
* வானமுட்டிப் பெருமாள் ஆலயம், மயிலாடுதுறை அருகே சுமார் 5 கி.மீ. தூரத்தில் கோழிகுத்தி என்ற சிறு கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் மூலவர் அத்தி மரத்தைக் கொண்டு 15 அடி உயரத்தில் சிலையாக வடிக்கப்பட்டுள்ளார். சங்கு, சக்கரம், கதை, அபயசீதம் ஏந்தி, மார்பில் மகாலட்சுமி விளங்க சேவை சாதிக்கிறார். பெருமாள் விஸ்வரூபமாக இருந்ததால் ‘வானமுட்டிப் பெருமாள்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாம். இக்கிராமத்தின் இயற்பெயர் ‘பாப விமோசனபுரம்’ என்பதாகும்.

* அத்தி, ஆறாவது கிரகமான சுக்ரனின் அம்சமாகக் கருதப்படுகிறது. வேலூரை அடுத்த பொன்னை, விநாயகபுரத்தில் நவக்கிரகங்களுக்கு ஒன்பது வகையான கோவில்கள் கட்டப்பட்டு உள்ளன. இது ஸ்ரீ நவக்கிரக கோட்டை ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு சுக்ரனை வணங்குவதற்காக அத்தி மரமும் நடப்பட்டுள்ளது. அசுர குரு சுக்ராச்சாரியார் அத்தி மரமாக மறுபிறவி எடுத்ததாக சதுர்மாசிய மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.

* நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிபுவை வதம் செய்த பின்பு, பெருமாள் அத்தி மரப்பட்டையில் நகங்களைப் பதித்துச் சுத்தப்படுத்திக் கொண்டாராம்.

* மும்மூர்த்திகளின் ஒரே வடிவமாக பார்க்கப்படும் தத்தாத்ரேயர், அத்தி மரத்திலே வாசம் செய்வதாக குரு சரித்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

* கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் கருத்துவேறுபாடு இன்றி வாழவும், கடைசி வரை பிரியாமல் இருப்பதற்கும், வீட்டில் அத்தி மரம் நட்டு வைத்து பராமரித்து வருவது நல்லது என்பது ஐதீகம்.

* அத்திக்கு நல்ல அதிர்வலைகள் உண்டு. எனவே அத்தி மரப் பலகையில் உட்கார்ந்து தவம் செய்தால் பூமியினுடைய புவிஈர்ப்பு விசை நம்மை அதிகம் தாக்காமல், எந்த மந்திரத்தை உச்சரிக்கிறோமோ, அந்த மந்திரத்தினுடைய பலன் முழுமையாகக் கிடைக்கும்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com