அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையம் அருகே உள்ள மௌனசாமி மடம் தெரு, ஸ்ரீகைலாஷ் மஹாலில் ஸ்ரீவித்யா காயத்ரி அறக்கட்டளை மற்றும் ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர் சார்பில் உலக மக்கள் நன்மை மற்றும் அளவோடு மழை வர வேண்டி ராகு-கேது பெயர்ச்சி லக்ஷ ஆவர்த்தி ஹோமம் பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் தலைமையில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு பெருங்குளம் சுப்பிரமணி ஜோஸ்யர் கலந்து கொண்டு லக்ஷ ஆவர்த்தி ஹோமத்தை தொடங்கிவைத்து பின்னர் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஹோமம் வழிபாடு செய்தனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.