ஆடிபூரத்தில் வளையோசை கல கலகலவென கவிதைகள் படிக்குது.

Aadi matha speacial Amman

சென்னை:ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் “ஆடிப்பூரம்” என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பூமாதேவி ஆண்டாளாக அவதரித்த நன்னாள் ஆடிப்பூரம்.திருவில்லிப்புத்தூரில் மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து வைணவத் திருத்தலங்களிலும் ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தை நோக்கிய ஆடி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆடி மாதம் சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன் சூரியனின் ராசியான சிம்மத்திலும் பரிவர்த்தனை பெற்றிருந்தபோது, நள வருடம், சுக்ல பட்சம், சதுர்த்தசி பூர நட்சத்திரம் கூடிய சனிக் கிழமையன்று துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள் ஆண்டாள். காதலித்து அரங்கநாதனையே கரம் பற்றியவள்.ஆடிப்பூரத் திருவிழா ஆண்டாள் அவதரித்த திருவில்லிப்புத்தூரிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும், ஆண்டாளின் அண்ணனான ராமானுஜரின் அவதார ஸ்தலமான ஸ்ரீபெரும்புதூரிலும் ஆடி உற்சவம் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. மற்றும் பல திருமால் ஆலயங்களிலும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த விழா அனைத்து வைஷ்ணவ தலங்களில் மட்டுமல்லாது மாதவனின் தங்கையாம் அகிலாண்டேஸ்வரி குடிகொண்டுள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும், வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூர நாள் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும்.

Aadi Pooram Also Called as Aandal Jayanti is a Prime Festival of Tamilians

நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளைகாப்பு நடத்துவது போல படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள். “வளைகாப்பு” என்ற சடங்கு கருவுற்ற பெண்களுக்கு அவரின் கணவர், பெற்றோர் உறவினர்களால் செய்யப்பெறும் ஓர் சமயச் சடங்காகும். அனேகமாக கருவுற்ற பெண்களுக்கு 5 ஆம் மாதம் வளைகாப்பு என்ற சடங்கு நிகழ்த்தப் பெறுகின்றது. பங்குனி உத்திரத்தில் இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் நடைபெற்றதை தொடர்ந்து ஆடி பூரத்தில் அனைத்து அம்பாள்களுக்கும் வளையகாப்பு செய்வது மரபு.