திருமணமான சிலர் பல வருடங்களாக குழந்தை செல்வத்திற்காக ஏங்கி தவிப்பதை நாம் பார்த்திருப்போம். இன்னும் சிலர் தங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்காத என ஏங்குவதையும் நாம் பார்த்திருப்பிப்போம். இந்த பிரச்னையை தீர்க்க சில வழிகள் உள்ளது. இந்த பதிவில் அதற்கான ஒரு மந்திரம் குறித்தும், அதற்க்கான உணவு வகைகள் குறித்தும் பார்ப்போம்
ஆண் குழந்தை பிறக்க மந்திரம் :
தேவ தேவ ஜகந்நாதா கோத்ர வ்ருத்திகர ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்பந்தம் யசஸ்விமம்.
பொருள்: தேவர்களுக்கெல்லாம் தேவனான ஜகந்நாதா பெருமானே, என் வம்சம் விருத்தியடைய எனக்கு சீக்கிரமே நல்ல ஆயுள் பலத்துடன் கூடிய ஒரு பிள்ளையை அருள வேண்டுகிறேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை மனதார வேண்டிக்கொண்டு இந்த மந்திரத்தை தினமும் 108 , 1008 என நீங்கள் விருப்பப்பட்ட எணிக்கையில் கூறலாம். இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஜபித்த பின் அதற்கான பலனை நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள். மந்திரத்தை ஜெபிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் உணவு பழக்கத்திலும் நீங்கள் சில மாறுதல்களை செய்வது அவசியம். ஆண் குழந்தை பிறக்க உண்ணவேண்டிய உணவுகள்: பால் சம்மந்தப்பட்ட உணவை தவிர்த்து, பொட்டாசியம் அதிகம் நிறைந்த உணவுகளான வாழைப்பழம், உருளை கிழங்கு, பச்சைப் பூக்கோசு (முட்டைக்கோஸ் வகையைச் சேர்ந்த ஒரு காய்கறி), கீரை போன்றவற்றை உண்பது அவசியம் என்று நவீன ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கர்ப்பம் அடைந்த உடன் அந்த கருவை ஆணாகவும் பெண்ணாகவும் மாற்றும் சக்தி ஒரு தாயிடம் உள்ளது என நவீன விஞ்ஞானம் கூறுகிறது.