ஆவணி அவிட்டம்-பூணூல் சிறப்பு

 

பூணூல்

பிராமணர் முதலிய சில இனத்தவர் சடங்கு செய்து இடது தோள்பட்டையிலிருந்து எதிர் விலாப் பக்கம் வரையில் உடம்பைச் சுற்றிப் போட்டுக்கொள்ளும் மூன்று புரியாக உள்ள முப்புரி நூல்

விளக்கம்.

பூணூல் = பூண் + நூல் நூல்களை எவரும் நேரிடையாக அணிவதில்லை. துணியாக நெய்துதான் அணிவர். அப்படியில்லாமல் சமய சடங்குகளுக்காக நேரிடையாக பூணத்தக்க (அணியத்தக்க) நூல்தான் பூணூல்.

பயன்பாடு
  • (பிராமணர்) ஆண்டுக்கொரு முறை ஆவணி அவிட்டம் நாளில் பூணூலைப் புதுப்பித்துக் கொள்வதைப் பெரும் விழா போன்று பெருமையுடன் கொண்டாடுகிறார்கள். பதின்மூன்று வயதிற்குள் இப்பூணூல் அணியப்பட வேண்டுமென்பது மரபு. பூணூல் அணிந்த பின் அதை அணிவோர் புதிய ஒரு பிறப்பு எய்துவதாக இச்சடங்குக்குப் பொருள் கூறப்படுகிறது. எனவே பூணூல் அணியும் உரிமை பெற்றவராகிய பார்ப்பனர் இருபிறப்பாளர் எனப்படுகின்றனர். முதன்முதல் பூணூல் அணியும் சடங்கை உபநயனம் என்று கூறுவர். பூணூல் அணிந்தவன் காயத்திரி என்ற மந்திர அறிவுரைபெற்றுப் புதுப்பார்வை பெறுகிறான் என்பது இதன் பொருள். ([]
  • திருமணம் ஆகாத பிரம்மச்சாரிகள் இருபிரி பூணூலும், மணம் முடித்தவர்கள் முப்பிரி பூணூலும் அணிவர். பிராமணர்களைத்தவிர ஆரிய வைசியர்களும், வேறு சில வகுப்பினரும் கூட பூணூல் அணிவர்.
  • உபநயனம் என்றதும் நாம் பிராமணர்கள் பூணூல் போடுவதை எண்ணிக்கொள்கிறோம். பழங்காலத்தில் ஏதாவது ஒன்றை முறைப்படி கற்றுக்கொள்ளும் எல்லாருமே பூணூல் போட்டார்கள். நான் சின்னப்பையனாக இருக்கும்போது பொற்கொல்லர்களும் தச்சர்களும் சிற்பிகளும்பூணூல் போட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். உபநயனம் என்றால் ‘இதோ ஒரு கல்வியைக் கற்றுக்கொள்ளப்போகிறேன்’ என்று ஒரு உறுதிமொழியை எடுத்துக்கொள்ளும் அடையாளம்தான். இன்றைக்கு பிராமணர்கள் மட்டும் பூணூல் போடுகிறார்கள். அதுவும் வெறும் சடங்காகப் போடுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் திருமணம் நடப்பதற்கு முந்தையநாள் உபநயனம் செய்து பூணூல் போட்டுக்கொள்கிறார்கள். (வயதடைதல், ஜெயமோகன்)
  • பூணூற்கலியாணம் – பூணூல் கலியாணம்

 

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com