ஆவூர்ப்பசுபதீச்சுரம் (ஆவூர்) கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: பசுபதீஸ்வரர், அஸ்வத்தநாதர், ஆவூருடையார்.
இறைவியார் திருப்பெயர்: மங்களாம்பிகை, பங்கஜவல்லி.
தல மரம்: அரசு.
தீர்த்தம் : பிரமதீர்த்தம், காமதேனுதீர்த்தம் முதலியன.
வழிபட்டோர்: சம்பந்தர்,காமதேனு, பிரமன், சப்தரிஷிகள், தேவர்கள், இந்திரன், சூரியன், நவக்கிரகங்கள்,வசிட்டர் ஆகியோர்.

தல வரலாறு

      • ஊர் – ஆவூர்; கோயில் – பசுபதீச்சுரம். 
      • வசிட்டரால் சாபம் பெற்ற காமதேனு, பிரமன் அறிவுரைப்படி உலகிற்கு வந்து இங்கு வழிபட்டுச் சாபம் நீங்கியதலம். (காமதேனு உலகிற்கு வந்த இடம். கோ + வந்த + குடி = கோவந்தகுடி ஆயிற்று)

         

      • கயிலையிலிருந்து, ஆதிசேடனுடன் போட்டியிட்டு வாயு தேவனால் கொண்டு வரப்பட்ட இருமலைச் சிகரங்களில் ஒன்று நல்லூரிலும் மற்றது ஆவூரிலும் தங்கியதாகப் புராணவரலாறு கூறுகிறது.

         

      • இங்குள்ள இரு அம்பிகைகளில், மங்களாம்பிகை குளத்திலிருந்து எடுத்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பங்கஜவல்லி அம்பாள்-இதுவே, பழமையானது. (தேவாரத்தில் ‘பங்கயமங்கை விரும்பும் ஆவூர் ‘ என்று வருகிறது. ஆனால் இங்குச் சிறப்பு மங்களாம்பிகை சந்நிதிக்கே.)

 

தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - புண்ணியர் பூதியர் பூதநாதர்.

தல மரம் : அரசு

சிறப்புகள்

      • கோச்செங்கட் சோழன் திருப்பணி – மாடக் கோயில். 
      • மணிகூடம், அசுவத்தவனம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள். 
      • சங்கப்புலவர்கள் ஆவூர் கிழார், ஆவூர் மூலங்கிழார் முதலிய சார்றோர்களைத் தந்த ஊர்.
      • கி. பி. 2-ஆம் நூற்றாண்டில் இவ்வூர் சோழ மன்னர்களின் கோட்டையாக விளங்கியது. 
      • கல்வெட்டுச் செய்தியில் “நித்தவிநோத வளநாட்டைச் சேர்ந்த ஆவூர்க் கூற்றத்தைச் சேர்ந்த பசுபதீஸ்வரமுடையார் ” என்று இறைவன் குறிக்கப்படுகிறார்.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் – மன்னார்குடி சாலையில் வலங்கைமான் வந்து அங்கிருந்து கோவந்தகுடி வழியாக இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்திலிருந்து பேருந்துகள் உள்ளன. தொடர்புக்கு : 9486303484.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com