இன்று சுமங்கலி பெண்கள் கடைபிடிக்க வேண்டிய காரடையான் நோன்பு

மாசி மாதமும், பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது தான் காரடையான் நோன்பு. கணவனின் ஆரோக்கியம் மற்றும் ஆயுள் விருத்தியை கொடுக்கும் காரடையான் நோன்பு இன்று கடைப்பிடிக்கப்படுகின்றது.

பூஜை செய்யும் காலம்:

காரடையான் நோன்பு தினம்: பங்குனி 1ம் தேதி (15-03-19)
நைவேத்தியம்:- காரடையான் நோன்பு அடை ( இனிப்பு, உப்பு)

காரடையான் நோன்பு பொதுவாக கெளரி நோன்பு, சாவித்திரி விரதம், காமாட்சி நோன்பு என கூறுவர். சாவித்திரி நோன்பு என அழைக்கப்படும் இந்த விரதம் இருந்தால் கணவனின் ஆயுளை அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

கற்பில் சிறந்தவளான சாவித்திரி, ஆயுள் காலம் முடிந்து அவரின் கணவன் சத்யவானின் உயிரை எமதர்ம ராஜன் பரித்துச் சென்ற போது, எமனிடமிருந்து மீட்டு வந்தாள் என நம்பப்படுகிறது.

விரதம் இருக்கும் முறை:

இந்த விரதத்தை கடைப்பிடிக்கும் பெண்கள் பூஜை முடியும் வரை உண்ணாமல் இருக்க வேண்டும். முடியாதவர்கள் பழங்களை சாப்பிடலாம். அதிகாலை நீராடி, வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை அலங்கரித்து, வாசலை மா இலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையில் காமாட்சி அம்மனின் படங்கள் அல்லது விக்ரகத்தை பூ மாலையால் அலங்கரிக்க வேண்டும்.

விரதம் அன்று செய்த அடையை சிறிது மீதம் வைத்து மறுநாள் பசுவுக்கு கொடுத்து, பசுவை வலம் வர வேண்டும் என்பது ஐதீகம். அதனால் தான் விரதத்தின் போது பால், தயிர் பொருட்களை சாப்பிடக்கூடாது.

இந்த விரதம் இருந்தால் விரதம் இருக்கும் பெண்ணின் கணவன் ஆயுள் விருத்தி, ஆரோக்கியம் பெருவான் என்பது ஐதீகம்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com