உங்களின் எதிரிகள், செய்வினை பாதிப்புகளை நீக்கும் அற்புத மந்திரம்

நம் வாழ்வில் அன்றாடம் பல எதிர்மறையான நிகழ்வுகள் நடந்தாலும், நேர்மறையான விடயங்களில் நமக்கு திடமான நம்பிக்கை இருக்குமானால் நமது வாழ்வில் நிச்சயம் நன்மைகளே நடக்கும். தெய்வ நம்பிக்கை மற்றும் இறைவழிபாடு என்பது இத்தகைய நேர்மறையான நம்பிக்கை மற்றும் செயல்பாடாக இருக்கிறது. அப்படி தெய்வங்களை வழிபடும்போது சக்தி வாய்ந்த மந்திரங்கள் துதித்து, அந்த தெய்வங்களை பிரார்த்திக்கும் போது பலன்கள் பல மடங்கு அதிகரிக்கிறது. உண்மையான பக்தர்களின் கஷ்டங்களை போக்கும் தெய்வமாக ஸ்ரீ ஐயப்பன் இருக்கிறார் அந்த ஐயப்பனுக்குரிய மூலமந்திரம் இதோ.

ஐயப்பன் மூலமந்திரம்

ஓம் ஸ்ரீ ஹரிஹர புத்ராய

புத்ர லாபய சத்ரு நாஸய

மத கஜ வாஹநாய

ஓம் ஸ்ரீ மஹ ஸஸ்த்ரெ நம

நைஷ்டிக பிரம்மச்சாரியாக சபரிமலையில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ ஐயப்பன் மூல மந்திரம் இது. ஐயப்பனுக்கு விரத காலத்தில் கடைபிடிக்கும் திரிகரண சுத்தியுடன் தினமும் இம்மந்திரத்தை 27 முறை துதிப்பது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் இந்த மூல மந்திரத்தை 108 முறை துதிக்க துஷ்ட சக்திகள் மற்றும் தீய எண்ணங்கள் உங்களை அணுகாது காக்கும். செய்வினை பாதிப்புகள், எதிரிகளின் தொல்லை நீங்கும். தடைபட்ட காரியங்கள் மீண்டும் தொடங்கி சிறப்பான பலன்களை தரும். புதிய முயற்சிகள் அனைத்தும் சிறப்பான வெற்றிகளை பெறும். புராணங்களின் படி மகாவிஷ்ணு மோகினி எனும் அழகிய பெண்ணாக உருவம் பெற்றிருந்த போது, சிவ பெருமானின் சூட்சம யோக சக்தியும் மோகினி அவதாரத்திலிருந்த திருமாலின் சக்தியும் ஒன்று கலந்து தோன்றிய கடவுளின் வடிவம் தான் ஸ்ரீ ஐயப்பன். சக்தியின் வடிவாக தோன்றிய ஐயப்பனை “பந்தள” அரசர் தனது குழந்தையாக தத்தெடுத்து வளர்த்தார். தனது அவதார நோக்கத்தை உணர்ந்த ஐயப்பன், பம்பை நதி ஓடும் அடர்ந்த காடுகள் நிறைந்த சபரிமலையில் வீற்றிருந்து தனது பக்தர்களுக்கு அருள் புரிகின்றார். அந்த ஐயப்பனுக்குரிய இந்த மூல மந்திரத்தை துதிப்பதால் மிகுந்த நன்மைகள் ஏற்படும்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com