உங்களின் ராகு – கேது தோஷங்கள் நீங்க துதிக்க வேண்டிய மந்திரம்

உலகில் தோன்றியுள்ள உயிர்கள் அனைத்துமே சமமானவை தான். இதில் எறும்பின் உயிருக்கு ஒரு தனி மதிப்பும், யானையின் உயிருக்கு ஒரு தனி மதிப்பும் கிடையாது. இத்தகைய உயிர்கள் அனைத்தையும் தெய்வத்தின் வடிவாக போற்றி வணங்கிய ஒரு மதமாக இந்து மதம் இருக்கிறது. அதில் நாக வழிபாடு எனப்படும் பாம்புகளின் வழிப்படும் பாரம்பரியம் தொன்று தொட்டு பின்பற்றப்படுகிறது. நமக்கு ஏற்படும் சர்ப்ப தோஷங்கள் நீங்கவும், நாக தேவதைகள் அருள் கிடைக்கவும் துதிக்க வேண்டிய சர்ப்ப தோஷ நிவர்த்தி மந்திரம் .

சர்ப்ப தோஷ நிவர்த்தி மந்திரம்

நர்ம தாயை நம ப்ராத நர்ம

தாயை நமோ நிசி 

நமோஸ்து நர்மதே துப்யம்

த்ராஹிமாம் விஷ ஸர்பத.

பாம்பின் வடிவில் இருக்கும் நாக தேவதைகளை போற்றும் மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலை மற்றும் மாலை வேளையில் 27 முறை அல்லது 108 முறை துதிப்பது நல்லது. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பாம்பு புற்றுள்ள கோவில்களுக்குச் சென்று, புற்றிற்கு முன் தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து வணங்குவதால், பாம்புகளை கொன்றதால் ஏற்பட்ட தோஷங்கள், ஜாதகத்தில் ராகு – கேது கிரகங்களின் பாதகமான நிலையால் ஏற்படும் திருமணத்தடை, கல்வித்தடை, வேலைவாய்ப்பின்மை, குழந்தை பாக்கியம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் நீங்கி நன்மையான பலன்களை பெறலாம். உலகில் வாழும் உயிர்களில் கை, கால்கள் இல்லாமல் உடலையே நகர்வதற்கு பயன்படுத்திக் கொள்ளும் ஒரு உயிராக பாம்பு இருக்கிறது. நமது சித்தர்கள், முனிவர்களின் கருத்துப்படி பாம்பு நமது முன்னோர்களில் ஒன்றாகும். எனவே பாம்பை கொல்வதால் ஒருவருக்கு நிச்சயமாக நாக, சர்ப்ப தோஷங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய தோஷங்கள் அனைத்தும் நீங்க மேற்கண்ட மந்திரத்தை துதிப்பது சாலச் சிறந்தது.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com