உங்களுக்கு காரிய வெற்றிகள் ஏற்பட, வாக்குவன்மை உண்டாக மந்திரம்

சரஸ்வதி தேவி என்பது அறிவு, ஞானம் ஆகியவற்றின் தெய்வம். சரஸ்வதியை வழிபடுவர்களுக்கு அறிவாற்றல் பெருகுவதோடு, செல்வம் மற்றும் அனைத்தையும் பற்றிய ஞானமும் கிடைக்கிறது. மேலும் வாழ்வில் பொருளாதார முன்னேற்றமும், இன்ன பிற வளங்களும் அவர்கள் பெற சரஸ்வதி தேவி அருள்புரிவாள். அந்த சரஸ்வதி தேவிக்குரிய மூல மந்திரம் .

சரஸ்வதி மூல மந்திரம்

ஓம் ஐம் ஸரஸ்வதியை நமஹ –

வீணையை கையில் ஏந்தி வீற்றிருக்கும் ஞானக்கடவுளான சரஸ்வதி தேவியை போற்றும் மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலை மற்றும் மாலை வேளையில் 108 முறை துதிப்பது நல்லது. புதன்கிழமைகள் மற்றும் சரஸ்வதி பூஜை தினத்தன்று காலை, மாலை வேளைகளில் சரஸ்வதி, அம்பாள் படத்திற்கு தீபம் ஏற்றி, இம்மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை துதித்து வந்தால் குடும்பத்தில் இருப்பவர்களின் ஆயுள் அதிகரிக்கும். எண்ணங்கள், சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். ஈடுபடும் அனைத்து காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். வாக்கு பலிதம் ஏற்படும்.

ஞாபகசக்தி அதிகரிக்கும். அனைத்து விடயங்களை பற்றிய ஞானம் உண்டாகும். சரஸ்வதி வழிபாடு மனிதனின் சிந்தனை அறிவு தான் பிற உயிர்களிலிருந்து அவனை வேறுபடுத்திக் காட்டும் ஒரு தனித்துவம் வாய்ந்த ஆற்றலாக இருக்கிறது. அந்த சிந்தனைத் திறன் கூர்மையாகவும், பலருக்கும் பயன்படும் உதவுவது சிறந்த கல்வியாகும். ஒருவருக்கு சிறந்த கல்வியறிவு, கலைஞானம் ஏற்படுவதற்கு கல்விக் கடவுளான ஸ்ரீ சரஸ்வதி தேவியின் கடாட்சம் தேவைப்படுகிறது. செல்வ மகளான லட்சுமி தேவியின் அருள் அனைவருக்குமே கிடைத்து விடும். ஆனால் கல்வி அறிவு கடவுளான சரஸ்வதி தேவியின் அருட்கடாட்சம் அவள் விரும்பும் நபர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஒரு பாக்கியமாக இருக்கிறது.

தினமும் சரஸ்வதி தேவிக்குரிய மந்திரங்களை ஜெபித்து வழிபடுபவர்களுக்கு சிறந்த கல்வியையும், அக்கல்வியறிவால் வாழ்வில் பல நன்மைகளும் உண்டாக அருள்புரியும் தெய்வமாக ஸ்ரீசரஸ்வதி தேவி இருக்கிறார். சரஸ்வதி வழிபாட்டிற்குரிய தினங்கள் சரஸ்வதி தேவியை வழிபடுவதற்கு எல்லா தினங்களும் சிறந்தது தான் என்றாலும் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் தேவிக்கு வெள்ளை தாமரை மலர் சமர்ப்பித்து, அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவு நைவேத்தியம் வைத்து சரஸ்வதி காயத்ரி மந்திரங்களை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதித்து வழிபடுவதால், வாழ்வில் சிறப்பான பலன்களை பெறமுடியும். புரட்டாசி – ஐப்பசி மாதங்களில் வருகின்ற நவராத்திரி விழாவின் இறுதியாக வரும் சரஸ்வதி பூஜை தினத்தன்று வீட்டில் சரஸ்வதி படத்திற்கு மாலைகள் சாற்றி, அவல் பொரி பழங்கள் போன்றவற்றை நைவேத்தியம் வைத்து, சரஸ்வதி தேவிக்குரிய காயத்ரி மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் துதித்து வழிபடுவதால் கல்வி, கலைகளில் சிறந்த தேர்ச்சி உண்டாகும்.

சரஸ்வதி வழிபாடு பலன்கள்

கல்விக்குரிய கடவுளாக சரஸ்வதி தேவி கருதப்பட்டாலும் சரஸ்வதி தேவியின் காயத்ரி மந்திரங்களை துதித்து வழிபடுபவர்களுக்கு சரஸ்வதி கடாட்சம் ஏற்படும். சிறந்த வாக்கு வன்மை உண்டாகும். சிலருக்கு வாக்கு பலிதம் ஏற்படும். அற்புதமான பேச்சாற்றல் உருவாகும். சிறந்த கல்வி ஞானம் கிடைக்க பெறுவார்கள். அனைத்து வகையான கலைகளிலும் தேர்ச்சி மற்றும் நிபுணத்துவம் உண்டாகும். புதியவற்றை உருவாக்கும் படைப்பாற்றல் மேம்படும். வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளில் சிறப்பான வெற்றிகளைப் பெறக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com