உங்களுக்கு சொந்த வீடு, நிலம் சீக்கிரம் அமைய இந்த சுலோகம் துதியுங்கள்

மனிதர்களாகிய நாம் வசிப்பதற்கென்று சொந்த வீடு இருப்பது மிகவும் சிறந்ததாகும். ஆனால் தற்காலங்களில் உள்ள பொருளாதார நிலைமை காரணமாக பலரும் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை வாடகை வீடுகளிலேயே கழித்து விடுகின்றனர். சொந்த வீடு அல்லது சொந்த நிலம் நமக்கு கிடைப்பதற்கு நவகிரகங்களில் பூமிகாரகன் எனப்படும் செவ்வாய் பகவானின் அருள்கடாட்சம் வேண்டும். அந்த செவ்வாய் பகவானின் பூரண அருளைத் தரும் செவ்வாய் ஸ்லோகம்.

செவ்வாய் ஸ்லோகம்

பூமிபுத்ரோ மஹாதேஜா ஜகதாம் பயக்ருத்சதா

வ்ருஷ்டிக்ருத் வ்ருஷ்டி ஹாதாச பீடாம் ஹரதுமே குஜ.

– – செவ்வாய் பகவானுக்குரிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் ஒன்பது முறை துதிப்பது சிறந்தது. செவ்வாய்க்கிழமைகளில் நவகிரக சன்னதிக்கு சென்று செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி, செந்நிற மலர்களை சமர்ப்பித்து, இந்த மந்திரத்தை 108 முறை அல்லது இரண்டு முறை துதித்து வந்தால் வெகு சீக்கிரத்தில் சொந்த வீடு அல்லது சொந்த நிலம் வாங்குவதற்கான யோகத்தை ஏற்படுத்துவார் செவ்வாய் பகவான். பூமியின் புத்திரனும், பயங்களை போக்குகிறவருமான அங்காரக பகவான் எனது தோஷங்களை போக்க வேண்டும் என்பதே மேற்கண்ட மந்திரத்தின் பொருளாகும். ஒரு மனிதனுக்கு சொந்த பூமி அல்லது நிலம் ஏற்பட அவரது ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருக்க வேண்டும். அப்படி வலுவில்லாத செவ்வாய் ஜாதகத்தில் கொண்டவர்களும் செவ்வாய் பகவானுக்குரிய மந்திரங்களை திட சித்தத்தோடு துதித்து வந்தால் அவர்கள் வேண்டிய அனைத்தும் அருள்வார் செவ்வாய் பகவான்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com