எல்லா வடிவிலும் மகா சக்தி

மகா சக்தி
எல்லா உலகங்களையும் ஆட்சி செய்கின்ற ஆதிபராசக்தி, சிவனுக்குள் அடங்கி இருந்தாலும், அவளது உருவங்களும், பெயர்களும் ஏராளம்.

ஓர் உருவமாக இருக்கும் அன்னை உமையவள், அர்த்தநாரீஸ்வரர் தோற்றத்தில் இரண்டாக இருக்கிறாள். அவளே ‘இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி’ என மூன்று வடிவம் ஆகிறாள். ‘பவானி, வைஷ்ணவி, காளி, துர்க்கை’ என சதுர்கால தேவதையாகவும் அன்னை பராசக்தி விளங்குகிறாள். பஞ்ச சக்திகளும் தானே என்று நிரூபணம் செய்வதற்காக ‘மகா துர்க்கை, மகாலட்சுமி, மகா சரஸ்வதி, சாவித்திரி, ராதை’ ஆகவும் வலம் வருகிறாள்.

அறுசுவையும் நானே என்பதை தெரியப்படுத்தும் வகையில், ‘ஸாகினி, காசினி, லாகினி, ராகிணி, டாகினி, வராகினி, யாகினி’ என ஆறு ஆதார சக்தி பீடமாக வீற்றிருக்கிறாள். சப்த ஸ்வரங்களுமாக, சப்த கன்னியராக ‘பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி’ என அருள்பாலிக்கிறாள். ‘அஷ்ட லட்சுமி, அஷ்ட மகா சக்தி’ என அஷ்டதிக்கு தேவதைகளாகவும் அன்னை திகழ்கிறாள்.

‘வன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேத துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை, ஜ்வால துர்க்கை, தீப துர்க்கை, ஆசூரி துர்க்கை, ரவுத்திர துர்க்கை என நவதுர்க்கையாக 9 வடிவம் எடுத்து நம் கண்களை குளிர வைக்கிறாள். ‘காளி, தாரா, ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, திரிபுர பைரவி, சகர்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, ராஜமாதங்கி, கமலாத்மிகா’ என அழகிய 10 வடிவங்களிலும் அன்னை தன்னை வெளிப்படுத்துகிறாள்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com