ஓம் நமசிவாய ” மந்திரத்தின் பொருள்

Sivan special

சிவபெருமானின் பஞ்சாச்சர பிராண மந்திரத்தின் உண்மை பொருள் விளக்கம்

” ஓம் நமசிவாய ” மந்திரத்தின் பொருள்
நமது இறைவழிபாடு என்பது வெறும் பிராத்தனைகளால் தொழுகை முறைகளால் உருவானது அல்ல. அண்ட சராசரங்களில் நிறைந்துள்ள ஆகர்ஷன சக்திகளோடு தொடர்பு கொண்டதாகும். எனவே இறைவனது திருப்பெயர்களும் மந்திரங்களாக அயனவெளியில் சஞ்சரிக்கின்ற அதிர்வலைகளாக இருக்கிறது.

இதன் அடிப்படையில் பஞ்சாசரத்தில் முதலாக வருகின்ற ஓம் உலகின் மூல ஒலியான பிரணவத்தை காட்டுகிறது. சி – என்பது சிவபெருமானையும், வா – என்பது அம்பாளையும், ய -என்பது மனிதர்களான ஜீவன்களையும் நம – என்பது ஜீவன்களை பற்றியுள்ள மாயை ஆணவம் கர்மம் என்ற மும்மலத்தையும் காட்டுவதாகும்.

அதாவது மலங்களால் சூழபட்டிருக்கின்ற நான் அவற்றிலிருந்து விடுபட அம்மையப்பனின் பாதங்களை பற்றி கொள்கிறேன் என்பதை ஓம் நமசிவாய என்ற மூல மந்திரத்தின் எளிய பொருள். இதுவே உண்மை பொருள்.