கடன் பிரச்சனை விரைவில் தீர எளிய பரிகாரம்

கடன் வாங்கும்போது ஜாக்கிரதையாக நேரம் பார்த்து நட்சத்திரம் பார்த்துதான் வாங்க வேண்டும். கடன் பிரச்சனை விரைவில் தீர செய்ய வேண்டிய பரிகாரங்களை பார்க்கலாம்.

மரணம் நிகழ்ந்து விட்டால் அந்த சவத்தை எப்போது இடுகாட்டுக்கு எடுத்து செல்வார்கள் தெரியுமா..? குளிகை நேரம் பார்த்துதான் சவத்தை எடுப்பார்கள்..காரணம் குளிகை நேரம் என்பது திரும்ப திரும்ப அந்த காரியம் நடக்க வைக்கும்…

எனவெ அந்த வீட்டில் அடிக்கடி மரணம் நிகழாதிருக்க, குளிகை நேரம் முடிந்த பிறகுதான் சவத்தை தூக்குவார்கள்..சிலர் கடன் வாங்கும்போது குளிகை நேரத்தில் வாங்கி விட்டால் திரும்ப திரும்ப கடன் வாங்கிபெரிய கடன்காரர் ஆகிவிடுவர்கள்..ஊரைவிட்டே செல்லும் நிலையோ தற்கொலை செய்யும் நிலையோ கூட ஏற்படுத்திவிடும்…எனவே கடன் வாங்கும்போது ஜாக்கிரதையாக நேரம் பார்த்து நட்சத்திரம் பார்த்துதான் வாங்க வேண்டும்….ராகுகாலம், எமகண்டம் இல்லாத நேரமாகவும் இருக்க வேண்டும்..

கடன் விரைவில் அடைபட செவ்வாய் கிழமை குளிகை நேரத்தில் பகல் 12 முதல் 1.30 க்குள் கடனில் சிறு பகுதியை கட்டினால் திரும்ப திரும்ப கடன் தொகையை முழுவதும் கட்டி மீண்டு விடலாம்..சங்கடஹர சதுர்த்தி அன்று வன்னி மரத்தின் இலைகளை கொண்டு விநாயகருக்கு அர்ச்சனை செய்ய அளவற்ற கடன்களை அடைக்க வழிபிறக்கும்..

ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரையில் சிவபெருமானுக்கு செந்தாமரை வைத்து 6 நெய்தீபமேற்றி வழிபட கடன்கள் விரைவில் தீரும்..

திண்டிவனம் அருகில் இருக்கும் திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலுக்கு உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் சென்று காலை 5 மணிக்கு பால் அபிசேகம் செய்து வழிபட கடுமையான நெருக்கடிகள் தீரும்.

குலதெய்வம் கோயிலுக்கு மாதம் தோறும் சென்று வழிபடுங்கள் ஆண் தெய்வமாக இருந்தால் அமாவசை அன்றும் பெண் தெய்வமாக இருப்பின் பெள்ர்ணமி அன்றும் செல்லலாம்..16 விதமான அபிசேகம் செய்து சர்க்கரை பொங்கல் வைத்து கோயிலுக்கு வருவோருக்கு பிரசாதமாக கொடுக்கவும் 27 நெய்தீபம் ஏற்றி வழிபடவும்..

ஜாதகத்தில் என்ன திசைபுத்தி நடக்கிறதோ அதற்கேற்ரப்படி தான தர்மம் செய்து கர்ம வழி தோசத்தை நிவர்த்தி செய்து கொள்ளவும்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com