கருணையுடன் கேட்டால் நிவர்த்தி செய்வாள் கெங்கையம்மன்

கஷ்டம் வரும் போது ஒவ்வொருவரும் கடவுளை தேடுவார்கள். அப்படி தேடும் கடவுள் நல்லது செய்தால் அதை விட மகிழ்ச்சி பக்தர்களுக்கு வேறு ஒன்றும் இருக்க முடியாது. அந்த வரிசையில் தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதல் கேட்டு விடுதலை கொடுக்கும் தாயாக ஸ்ரீதேவி பாட்டை கங்கையம்மன் உள்ளார். நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக விளங்கிய தங்கச்சுரங்கத்தில் பணியாற்ற தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்கவயல் வந்தனர். சுரங்கத்தில் பணியாற்றியவர்களுக்கு சுரங்க நிர்வாகம் ஆங்காங்கே குடியிருப்புகள் ஏற்படுத்தியது. மக்கள் வாழும் பகுதியில் தவறாமல் அம்மன் கோயில் கட்டி வழிபட்டனர்.

ஆழசுரங்கத்தில் பணியாற்றியதால், தங்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் வந்து விடக் கூடாது என்பதால் இறைநம்பிக்கையில் அதிகம் நாட்டம் கொண்டிருந்தனர். அப்படி பக்தர்களின் முயற்சியில் கடந்த நூறாண்டுகளுக்கு முன் தங்கவயல் – பங்காருபேட்டை மாநில நெடுஞ்சாலையில் உள்ள என்றீஸ் பகுதியில் சிறியளவில் ஸ்ரீதேவிபாட்டை கங்கையம்மன் கோயில் கட்டி வழிபட்டனர். இந்த கோயிலில் வந்து வேண்டியவர்களுக்கு நல்லது நடந்தால், நாளுக்கு நாள் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பின் கோயிலை மேம்படுத்த திட்டமிட்டு தனியாக குழு அமைத்தனர். அதன் பின் பக்தர்களின் நன்கொடையால் சிறியளவில் இருந்த கோயில் புதுப்பிக்கப்பட்டு சிறப்பாக கலை நுட்பத்துடன் கட்டப்பட்டது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com