கர்ம வினைகளை போக்கும் ராகு ஸ்தோத்திரம்

விலங்கினங்களில் பாம்புகள் யாரையும் தேடிச் சென்று தீண்டுவதில்லை. அப்பாம்பை சீண்டும் உயிர்களையே தனது விஷப் பற்களால் பாம்புகள் கடித்து விடுகின்றன. அந்த பாம்பின் தன்மை கொண்ட நவ கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகுவும் எந்த ஒரு மனிதரையும் காரணமின்றி தண்டிப்பதில்லை. ஒரு நபரின் ஜாதகத்தில் அவரின் கர்மவினைப்படி அனுபவிக்க வேண்டியவற்றை இறைவனின் பிரதிநிதியாக நவகிரக நாயகரான ராகு பகவான் செயல்படுத்துகிறார். அதே நேரம் அந்த ராகு பகவானின் மனம் குளிர அவருக்குரிய மந்திரங்கள் துதித்து வழிபடுபவர்களுக்கு ராகு கிரக பாதிப்புகள் ஏற்படுவது வெகுவாக குறைகிறது. அந்த வகையில் ராகுவை வழிபடுவதற்குரிய ராகு ஸ்தோத்திரம் துதிப்பதால் ஏற்படுகின்ற பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Related image

ராகு ஸ்தோத்திரம்

கயானாஸ்சித்ர அபூவதூதீ ஸதாவ்ருதஸ்ஸகா

கயா ஸசிஷ்டாய வ்ருதா

ராகு பகவானின் வழிபாட்டிற்குரிய அற்புதமான ஸ்தோத்திரம் இது. இந்த ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் ராகு பகவானை மனதில் நினைத்தவாறே 108 முறை 1008 முறை துதிக்க வேண்டும். மேலும செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வருகின்ற ராகு கால நேரத்தில் சிவாலயங்களுக்கு சென்று, நவகிரக சன்னதியில் ராகு பகவானுக்கு சிறிது குதிரை கொள்ளு சமர்ப்பித்து, நெய் தீபங்களேற்றி இந்த ஸ்தோத்திரத்தைப் துதித்து வருவதால் ஜாதகத்தில் ராகு பகவானால் ஏற்படுகின்ற தோஷ பாதிப்புகள் குறையும். வயிறு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் தீரும். போதைப் பொருள் உபயோகித்தல் போன்ற தீய பழக்கங்களில் இருந்து விடுதலை பெறலாம். விரக்தியான மனநிலை நீங்கி சுறுசுறுப்பும் உற்சாகமும் உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். மற்ற கிரகங்களை காட்டிலும் நிழல் கிரகங்களான ராகு – கேது சக்தி வாய்ந்தவை என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அதிலும் ராகு பகவான் ஒரு நபருக்கு ஜாதகத்தில் கெடுதலான அமைப்பில் இருந்தால் அந்த நபர் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாதல், வயிற்றில் தொடர்ந்து நோய்களில் அவதிப்படுதல், புற்றுநோய் பாதிப்பு, தீய சகவாசம், தீய எண்ணம் செயல், கொண்ட பெண்களால் அவமானம், சிறை செல்லுதல் போன்ற விபரீதங்கள் ஏற்படக்கூடும். ராகு பகவானுக்குரிய மந்திரம், ஸ்தோத்திரம் தொடர்ந்து துதிப்பவர்களுக்கு இத்தகைய பாதகங்கள் ஏதும் ஏற்படாமல் ராகு பகவான் காத்தருள் புரிவார்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com