கஷ்டங்களை போக்கும் அஷ்டமி விரதம்

bhairavar pooja
திருமாலின் அவதாரமான கண்ணன் அஷ்டமி திதியில் பிறந்தவர். அவர் பிறந்த தினம் ‘கோகுலாஷ்டமி’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

வைகாசி ‘அஷ்டமி விரதம்’ சிவனுக்குரிய விரதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆடி மாதம் தேய்பிறையில் வரும் அஷ்டமி, தட்சிணாமூர்த்திக்காக மேற்கொள்ளப்படுகிறது. அஷ்டமி திதியில் துர்கைக்கு விரதம் இருந்து வழிபடுவது, உத்தமப் பலன்களைத் தரும். அஷ்டமி விரதம், சகலவிதமான கஷ்டங்களையும் போக்கும்.