காரிய தடையை நிவர்த்தி செய்யும் சுதர்சன ஸ்லோகம் பதிவு:

சுதர்சன மந்திரத்தை ஜெபிக்க தொடங்கும் முன்பு மகாவிஷ்ணுவை மனதில் தியானித்து அவருக்குரிய “ஓம் நமோ நாராயணா” மந்திரத்தை துதித்து அவரை ஜெபித்த பின்பு இந்த சுதர்சன ஸ்லோகத்தை துதிப்பதால் மிகுந்த நன்மை பெறலாம்.

ஓம் நமோ பகவதே மஹா

சுதர்ஷனாய ஹூம் பட் ஸ்ரீம்

ஹ்ரீம் ஓம் சுதர்ஷன சக்ராய
ரிபு சித்தம் பிராமய பிராமய ஸ்வாஹா

திருமாலின் கையில் ஏந்தியிருக்கும் மகா சுதர்சன சக்கரம் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் பெருமாளின் படத்திற்கு முன்பாக நின்று 27 முறை துதிப்பது மிகவும் நல்லது. பெருமாள் வழிபாட்டிற்குரிய சனிக்கிழமைகள், மாத ஏகாதசி ஆகிய தினங்களில் பெருமாள் ஆலயத்திற்கு சென்று சக்கரத்தாழ்வாரை தரிசித்து இம்மந்திரத்தை 108 முறை துதிப்பதால் உங்களின் குல சாபங்கள் நீங்கும். தீய எண்ணங்கள், துஷ்ட சக்திகள் உங்களிடம் இருந்து நீங்கும். உங்களுக்கு அனைத்து விடயங்களிலும் ஏற்படும் தடைகள் தாமதங்கள் ஆகியவற்றை தகர்த்தெறியும் சக்தி சுதர்சன ஸ்லோகத்திற்கு உண்டு.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com