குடந்தைக்காரோணம் (சோமேசர் திருக்கோயில்)

இறைவர் திருப்பெயர்: சோமேசர், சிக்கேசர், சோமநாதர்.
இறைவியார் திருப்பெயர்: சோமசுந்தரி, தேனார் மொழியாள்.
தல மரம்: வேம்பு.
தீர்த்தம் : சோம தீர்த்தம்.
வழிபட்டோர்: சம்பந்தர்,வியாழன், சந்திரன் முதலியோர்.

தல வரலாறு

      • மகாசங்கார காலத்தில் ஆன்மாக்களை இறைவன் ஐக்கியமாக்கிக் கொண்டதலம் காரோணம் எனப்படும்.

         

      • இக்கோயில் அம்பிகை, இறைவன் திருமேனியை ஆரோகணித்த தலமாதனின் காரோணம் என்றாயிற்று.

         

      • அமுத கலசம் வைத்திருந்த உறி சிவலிங்கமான தலமிது. எனவே சிக்கேசம் (சிக்கம் – உறி) என்றும் பெயர்.

 

தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - வாரார்கொங்கை மாதோர்பாக.

 

தல மரம் : வேம்பு

சிறப்புகள்

      • இத்தலத்தில் இராமன், இராவணனை கொல்ல ருத்ராம்சம் வேண்டி வழிபட்டு உடலில் ருத்ராம்சம் ஆரோகணிக்கப் பெற்றதால் காய – ஆரோகணம் – காரோணம் என்று இஃது பெயர் பெற்றதால், மகாமகக் குளத்தின் வடகரையில் உள்ள இக்’காசி விசுவேசம்’ என்னும் கோயிலே குடந்தைக் காரோணம் என்றும் சொல்கின்றனர். இக்கோயில் மேற்கு நோக்கிய சந்நிதியாக எழுபத்திரண்டு அடி உயர இராஜகோபுரமும் இரண்டு பிரகாரங்களுடனும் காட்சியளிக்கின்றது. சுவாமி – காசிவிஸ்வநாதர்; அம்பாள் – விசாலாட்சி.

         

      • திருஞானசம்பந்தர் பாடலில் “தேனார் மொழியாள் திளைத்தங்காடித் திகழும் குடமூக்கில், கானார் நட்டம் உடையார் செல்வக்காரோணத்தாரே” என்று குறிப்பிட்டுள்ளமையால், அம்பிகை பெயர் வழங்கும் தலம் (சக – உமேசம்) சோமேசம் ஆதலின் இதுவே பாடல் பெற்ற தலமாகக் கொள்ளப்படுகிறது.

      • குடந்தைச் சிவனடியார் திருக்கூட்டத்தினர் இத்திருக்கோயிலையே குடந்தைக் காரோணமாக ஏற்றுக்கொண்டு 1958-ஆம் ஆண்டில் காரோணப் பதிகத்தைக் கல்லில் பொறித்துச் சுவரில் பதித்துள்ளனார்.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு தமிகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இங்கு வருவதற்கு பேருந்து வசதி உள்ளது.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com