கும்பகோணம் சக்கரபாணி பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

கும்பகோணத்தில் சக்கரபாணி பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் சூரிய பகவான் வழிபட்டு சாப விமோசனம் பெற்றதால், பாஸ்கர ஷேத்திரம் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் ஏகாதசி நாளில் சக்கரபாணி பெருமாள்-சுதர்சனவல்லி தாயார் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மாலை மாற்றல் உற்சவம், ஊஞ்சல் உற்சவம் ஆகியவற்றை தொடர்ந்து சிறப்பு யாகம் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி இசை நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com