குரு காயத்திரி மந்திர

“குரு பார்த்ததால் கோடி நன்மை” என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வகையில் குரு பார்வை இருந்தாலே போதும் நாம் நம்முடைய வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்றுவிடலாம். ஆனால் இதற்க்கு நேர்மாறாக ஒருவரது ஜாதகத்தில் குரு தோஷம் இருந்தால் பல விதமான இன்னல்கள் நேரும். குரு தோஷம் நீங்கி சகல செல்வங்களையும் பெற உதவும் குரு காயத்ரி மந்திரம் இதோ.

குரு காயத்ரி மந்திரம்:

ஓம் விரு‌ஷபத் வஜாய வித்மஹே

க்ருணி ஹஸ்தாய தீமஹி

தந்நோ குருஹ் ப்ரசோதயாத்.

பொது பொருள்: இடப்பக்கத்தில் கொடியை வைத்திருக்கும் குரு பகவானே, எப்போதும் உங்கள் அருட்கரங்களால் அருள்மழை பொழியும் ப்ரகஸ்பதியே, என் வாழ்வில் உள்ள தீமைகளை அகற்றி நன்மைகளை அளித்திட வேண்டுகிறேன். மேலே உள்ள மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் மூலம் குரு தோஷம் விலகும், தீமைகள் விலகும், அரசு பணிக்கு முயற்சி செய்வோருக்கு பணி கிடைக்கும். அதோடு குருவால் சகல நன்மைகளும் ஏற்படும். தினமும் துதிக்க இயலாதவர்கள் வியாழக்கிழமைகளில் மட்டும் துதிப்பதாலும் முழுமையான பலன்களை பெறலாம். குரு பகவான் பரிகாரங்கள்: முழுமையான சுப கிரகமான குரு பகவானின் அருளைப் பெறுவதற்கு நவக்கிரகங்களில் குரு பகவான் தலமான தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஆலங்குடி ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு காலை 8 மணிக்குள்ளாக சென்று, தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்தை ஆறு மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ செய்வது குருபகவானின் அருளை உங்களுக்கு பெற்றுத் தரும். மேற்சொன்ன பரிகாரத்தை செய்ய இயலாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் நவக்கிரக சந்நிதிக்கு வியாழக்கிழமை தினத்தில் காலை 8 மணிக்குள்ளாக சென்று, 27 கொண்டைக்கடலை கோர்த்த மாலையை குருபகவானுக்கு அணிவித்து, மஞ்சள் நிற பூக்கள் சமர்ப்பித்து, மஞ்சள் நிற இனிப்பு வகையை நைவேத்தியம் செய்து, குரு காயத்ரி மந்திரத்தை 108 முறை துதித்து வருவதால் குரு பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, உங்கள் வாழ்வில் மேன்மையான பலன்கள் ஏற்படும். இந்த பரிகாரத்தை குறைந்தபட்சம் 9 வாரங்கள் முதல் அதிகபட்சம் 27 வாரங்கள் வரை செய்தால் மட்டுமே குருபகவானின் முழுமையான அருளை பெற முடியும்.

இந்த இரண்டு பரிகாரங்களையும் செய்ய முடியாதவர்கள் வீட்டில் ஒரு வியாழக்கிழமை தினத்தில் குழந்தைகளுக்கு மஞ்சள் நிற இனிப்பு வகைகளை உண்ண கொடுக்க வேண்டும். குரு பகவானின் வாகனமாக யானை இருக்கிறது. கோயில் யானைகளுக்கு வாழைப்பழங்கள் மற்றும் கரும்பு போன்றவற்றை உண்ணக் கொடுப்பது உங்களுக்கு குருவின் முழுமையான நல்லருளை பெற்றுத்தரும். வேதங்களுக்கு அதிபதியாக குரு பகவான் இருக்கிறார். எனவே உங்களால் இயன்ற பொழுது உங்கள் சக்திக்கே ற்ப வேத பாராயணம் செய்யும் வேதியர்களுக்கு மஞ்சள் நிற துணிகளை வஸ்திர தானம் செய்வது, ஜாதகத்தில் குரு திசை, குரு புத்தியில் கெடுதலான பலன்களை அனுபவிப்பவர்கள் குரு கிரக தோஷங்கள் நீங்கப்பெற்று செல்வம் மற்றும் இன்ன பிறசுகபோகங்களும் கிடைத்து சிறப்பாக வாழ குரு பகவான் அருள் புரிவார்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com