கோவை விருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

Image result for கோவை விருந்தீஸ்வரர் கோவில்

கோவை விருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
கோவை துடியலூர் அடுத்த வடமதுரையில் பிரசித்தி பெற்ற விருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி பிற மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இந்த கோவில் திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

இதில் கன்னிமூல கணபதி, விருந்தீஸ்வரர், விஸ்வநாயகி அம்பாள், சுப்பிரமணியர், லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆகிய தெய்வங்களுக்கு கோபுரங்கள் எழுப்பப்பட்டன. மேலும் துர்க்கை, சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன், நவநாயகர்கள், சனீஸ்வரன், ஆஞ்சநேயர், அதிகாரநந்தி உற்சவமூர்த்தி சந்நிதிகளும் கட்டப்பட்டன.

பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை தொடர்ந்து கோவில் கும்பாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கின. நேற்று முன்தினம் மாலை புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்கள், முளைப்பாலிகை, விமான கலசம் மற்றும் மங்களப்பொருட்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டன. அதைதொடர்ந்து விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதையடுத்து, யாககால பூஜையை அருண்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விழாக்குழு தலைவர் டி.வி.மணி மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வராஜ், ரவி, தொழில் அதிபர் கிருஷ்ணகுமார் என்கிற கண்ணன் உள்பட பலர் கலந்து கொண் டனர்.

நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலையில் திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருவீதி உலா நடைபெறுகிறது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் பி.வி.மணி, செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com