சரஸ்வதி காயத்ரி மந்திரம்:

கல்விக்கடவுளான சரஸ்வதி தேவியே அனைத்து கலைகளுக்கும் தெய்வமாக விளங்குகிறாள். வெள்ளை ஆடையோடு வெந்தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவியை எவர் ஒருவர் வணங்குகிறாரோ அவரால் அனைத்து கலைகளையும் எளிதில் கற்க முடியும். சரஸ்வதி தேவியை போற்றும் வகையில் “சகலகலாவல்லி மாலை” என்னும் நூலை குமரகுருபரர் இயற்றியுள்ளார்கள். இப்படி பல சிறப்புக்கள் மிக்க சரஸ்வதி தேவியை வணங்கும் சமயத்தில் அவருக்குரிய காயத்ரி மந்திரம் அதை கூறுவதன் பயனாக அவரின் அருளை பரிபூரணமாக பெறலாம்.

சரஸ்வதி காயத்ரி மந்திரம்:

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே

பிரஹ்மபத்ன்யை ச தீமஹி

தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

பொது பொருள்:

மனிதர்களுக்கு பேசும் திறன் கொடுத்த தேவியே, பிரம்ம தேவனின் பத்தினியே, நான் அனைத்திலும் சிறந்து விளங்க எனக்கு அருள்புரிய வேண்டுகிறேன் கலைவாணி தாயே.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com