தாணுமாலயசாமி கோவிலில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவையொட்டி தினமும் காலை 8 மணிக்கும், இரவு 7 மணிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இரு அம்மனுடன், பெருமாளும் எழுந்தருளும் வாகன பவனி நடந்தது. இதுதவிர அபிஷேகங்களும், சிறப்பு வழிபாடுகளும், சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாராதனையும் நடந்தது.
9-ம் திருவிழாவான நேற்று மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இரு அம்மனையும், பெருமாளையும் அலங்கரிக்கப்பட்ட இந்திர தேராகிய சப்பரத்தேரில் எழுந்தருள செய்து நான்கு ரதவீதிகளின்வழியே மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக இழுத்து வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணைஆணையர் அன்புமணி தலைமையில், திருக்கோவில் பணியாளர்களும், பக்தர்களும் செய்து இருந்தனர்