புதுச்சேரி : துருவை சேரடி செங்கழுநீரம்மன் கோவில் செடல் உற்சவ விழா நேற்று நடந்தது.

சஞ்சீவிநகர் அடுத்த துருவை கிராமத்தில் சேரடி செங்கழு நீரம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து, தற்போது செடல் பிரமோற்சவ விழா கடந்த 21ம் தேதி துவங்கியது.முதல் நாள் கரகம், இரண்டாம் நாள் பூந்தோட்டம் அழித்தலும் நடந்தது. மூன்றாம் உற்வசமான நேற்று அம்மனுக்கு கூழ் வார்த்தல், செடல் உற்சவமும் நடந்தது.பக்தர்கள், செடல் போட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். மாலை 6:00 மணிக்கு, கழுமரம் ஏறுதல் நடந்தது.