செல்வ வளம் பெருக்கும் ஸ்ரீஸூக்தம்

பாற்கடலில் இருந்து தோன்றிய மகாலட்சுமி வறுமையைப் போக்கி நற்பொருளை அளிக்கும் சக்தி பெற்றவள்.  இல்லாமை என்ற சொல்லை இல்லாமல் செய்பவள். அதோடு ஒருவருக்கு பொன் பொருள் ஆடை ஆபரணங்களை தருவதும் மகாலக்ஷ்மியே. ஸ்ரீஸுக்தத்தை தினமும் பாராயணம் செய்தால் வாழ்க்கை வளம் பெரும். மந்திர பாராயணம் செய்ய முடியாதவர்கள் தினம் தோறும் இந்த மந்திரத்தை காதால் கேட்டாலே திருமகளின் திருவருளை பெறமுடியும். உங்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற செல்வத் திருமகளை பிரார்த்திப்போம்.
Related image
ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண
– ரஜதஸ்ரஜாம்
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ
ம ஆவஹ 

விஷ்ணு பகவானே ! தங்க நிறம் உடையவளும், பாவத்தைப் போக்குகிறவளும், பொன் – வெள்ளி ஆபரணங்களைத் தரித்தவளும், எல்லா மக்களையும் சந்தோஷமாக வைத்திருப்பவளும், தங்க உருவமாகத் தோற்றமளிப்பவளும், எல்லாரும் ஆசைப்படுகிறவளுமான லக்ஷ்மி தேவியின் அருள் நமக்கும் கிட்டும்படி தேவியை வேண்டுவோம்.

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ
-மநபகாமிநீம்
யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காமஸ்வம்
புருஷாநஹம் 

லக்ஷ்மி கடாக்ஷம் நம்மிடம் இருந்தால் நாம் தங்கம் போன்ற உயர்ந்த பொருட்களையும் பசுக்கள், குதிரைகள், யானைகள் போன்றவற்றுடனான உயர்ந்த செல்வங்களையும், நல்ல சத்புத்திரர்களையும் உண்மையான சீடர்களையும் அடைய முடியும். அந்த லக்ஷ்மியின் அருட்கடாட்சம் நம்மை விட்டுப் பிரியாமல் இருக்க அருள்புரிய வேண்டுவோம்.

அஸ்வபூர்வாம் ரத – மத்யாம் ஹஸ்திநாத
-ப்ரபோதிநீம்
ஸ்ரியம் தேவீமுபஹ்வயே ஸ்ரீர்மா தேவீர்
ஜுஷதாம் 

குதிரைப்படை முன்னால் செல்கிறது. நடுவில் தேர்ப்படை போகிறது. யானைகளின் பிளிறல் ஓசை எந்த அன்னையின் மஹிமையை மற்றவர்களுக்கு அறிவிக்க கஜநாதம் செய்கிறதோ அந்த ஸ்ரீதேவியை நம்மிடம் வருமாறு தேவியை வேண்டுவோம். அனைவருக்கும் புகலிடமான லட்சுமிதேவி நம்மை வந்தடையட்டும்.

காம் ஸோஸ்மிதாம் ஹிரண்யப்ராகாரா
மார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந்தீம்
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் தாமிஹோ
பஹ்வயே ஸ்ரியம் 

மகிழ்வான தோற்றத்தை உடையவளும், எப்பொழுதும் புன்முறுவலுடன் காட்சி தருபவளும், பொன்மயமான பிராகாரம்போல் ஒளிரும் தேகத்தை உடையவளும், யானைகளின் திருமஞ்சன நீரினால் நனைந்த திருமேனியை உடையவளும், திசை எங்கும் தன் ஒளியைப் பரப்புபவளும், குறைவில்லாத நிறைவை உடையவளும், தன்னைப் போலவே பக்தர்களும் நிறைவாக இருக்கவேண்டும் என்று நினைப்பவளும், தாமரைப் பூவில் வசிப்பவளும், தாமரை போன்ற நிறம் உடையவளும், என்ற பெயரை உடையவளுமான லட்சுமி தேவியை நம் இருப்பிடத்திற்கு அழைக்க பிரார்த்திப்போம்.

சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம்
ஸ்ரியம் லோகே தேவஜூஷ்டா – முதாராம் :
தாம் பத்மிநீமீம் சரண-மஹம் ப்ரபத்யே
அலக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே

பக்தர்களை மகிழ்விப்பவளும், ஒளியாய் பிரகாசிப்பவளும், அனைத்து உலகங்களிலும் புகழப்படுபவளும், பக்தர்களைத் தேடி வந்து அருள்பவளும், தேவர்களால் துதிக்கப்பட்டவளும், உதாரகுணம் நிறைந்தவளும், சக்கரம்போல் வட்டமான தாமரைப் பூவை கையில் தரித்திருப்பவளும், வேத, இதிகாச புராணங்களில் போற்றப்படுபவளுமான தேவியை  சரணடைவோம். நம்முடைய வறுமை அழியட்டும். நமக்கு அருள் கிடைக்கட்டும்.

ஆதித்ய – வர்ணே தபஸோ திஜாதோ
வநஸ்பதிஸ்தவ வ்ருக்க்ஷோத பில்வ:
தஸ்ய பலாநி தபஸா நுதந்து மாயாந்த
ராயாஸ்ச பாஹ்யா அலக்ஷ்மீ:

சூரியனைப்போல் ஒளி நிறைந்தவளே! உன்னுடைய அருளால் பூ இல்லாமல் பழம் உண்டாகும் வில்வ மரம் உண்டாகியது. அந்த மரத்தின் பழங்கள் உன்னுடைய அருளைப் போல மனங்களின் உள்ளேயும், வறுமைகளையும் போக்க வல்லன. உன்னுடைய அருளால் கிடைக்கும் அந்த மரத்தின் பழங்கள் மூலமாக அறியாமையையும் வறுமையையும் போக்கி எங்களுக்கு அருளவேண்டும்.

உபைது மாம் தேவஸக : கீர்திஸ்ச மணிநா ஸஹ :
ப்ராதுர் பூதோஸ்மி ராஷ்ட்ரே – ஸ்மிந் கீர்த்திம்ருத்திம் ததாது மே

செல்வத்திற்கு தலைவனான குபேரனும் புகழின் தேவனும் என்னை நாடி வர வேண்டும். உனது அருளும் கருணையும் நிறைந்த இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன் எனக்கு பெருமையையும், செல்வ வளங்களையும் அருள்வாய்.

க்ஷுத்பிபாஸாமலாம்
ஜ்யேஷ்டா மலஷ்மீம் நாச
யாம்யஹம்
அபூதி மப ம்ருத்யும் சஸர்
வாம் நிர்ணுத மே க்ருஹாத் 

பசியினாலும், தாகத்தினாலும் இளைத்தவளும் , (உனக்கு மூத்தவளும்), முன்னால் பிறந்தவளுமான, செல்வத்திலிருந்து விலகிய மூதேவியை நான் ,எனது இல்லத்திலிருந்து விலக்குகிறேன். எல்லா ஏழ்மையையும் வறுமையையும் அகற்றி அருள்க.

கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம்
கரீஷிணீம்
ஈஸ்வரீம் ஸர்வபூதானாம் தாமிஹோபஹ்
வயே ச்ரியம் 

நறுமணத்தின் இருப்பிடமானவளும், எவராலும் வெல்லப்பட முடியாதவளும், என்றும் இனிமையைத் தருபவளும், அனைத்தும் நிறைந்தவளும், அனைத்து உயிர்களின் தலைவியுமான, மகாலக்ஷ்மியை இங்கே எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன்

மநஸ:  காமமாகூதிம் வாசஸ் ஸத்யமசீமஹி
பசூனாம் ரூபமந்நஸ்ய மயி ஸ்ரீச்ரயதாம் யச:

திருமகளே! தருமத்திற்குப் புறம்பாகாத எனது நல்ல ஆசைகளையும் , மகிழ்ச்சியையும் , வாக்கில் உண்மையையும், பசுக்களின் மற்றும் உணவின் நிறைவால், ஏற்படுகின்ற இன்பத்தை நான் நுகர வேண்டும். எனக்கு புகழ் உண்டா கட்டும். அதற்கு திருவருள் புரிவாய்.

கர்தமேன ப்ரஜாபூதா மயி ஸம்பவ கர்தமRelated image
ச்ரியம் வாஸய மே குலே மாதரம் பத்மமாலிநீம் 

கர்த்தமரே! உமது மகளான மஹாலக்ஷ்மி என்னிடம் வர வேண்டும். தாமரை மாலை அணிந்தவளும், செல்வத்தின் தலைவியும், அன்னையுமாகிய அவளை என் குலத்தில் தங்கச் செய்ய வேண்டும். நீ எனக்குப் பெருமையும் செல்வமும் தருவாய் .

ஆப: ஸ்ருஜந்து ஸ்நிக்தானி சிக்லீத வஸ மே க்ருஹே |
நிஜ தேவீம் மாதரம்  ச்ரியம் வாஸய மே குலே ||
லக்ஷ்மியின் மகனான சிக்லீதரே!  

தண்ணீர் சிறந்த உணவுப் பொருள்களை விளைவிக்கட்டும் நீங்கள் என் இல்லத்தில் வசிக்க வேண்டும். தேவியும் உங்கள் அன்னையுமான மகாலக்ஷ்மியை என் குலத்தில் நிலைத்து வாழ அருள வேண்டும் .

ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் ஸுவர்ணாம்
ஹேமமாலினீம்
ஸூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாத
வேதோ ம ஆவஹ அக்னியே! 

கருணை நிரம்பிய மனதை உடையவளும், தாமரை மலரில் உறைபவளும் , உணவூட்டி அனைவரையும் வளர்ப்பவளும், உருக்கிய பசும்பொன் நிறத்தை உடையவளும் , பொன்மாலை அணிந்தவளும், பகலவன்போல் பிராகாசிக்கின்றவளும், பொன் மயமானவளுமான திருமகளை என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும்.

ஆர்த்ராம் யஃ கரிணீம்
யஷ்டிம் பிங்கலாம் பத்மமாலினீம்
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம்
ஜாதவேதோ ம ஆவஹ அக்னியே! 

கருணை நிரம்பியவளும் ,செயல் திறத்தில் கம்பீரமானவளும், நீதியை நிலை நிறுத்த செங்கோல் ஏந்தியவளும்,  சந்திரன் போல் குளுமையானவளும், பொன்னிறமானவளும், தாமரை மாலை அணிந்தவளுமான திருமகள் என் முன் தோன்ற வேண்டும்.

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ-மனப
காமினீம் யஸ்யாம்
ஹிரண்யம் ப்ரபூதம் காவோ தாஸ்யோ-
ஸ்வான் விந்தேயம் புருஷானஹம் அக்னி தேவனே! 

யாரால் அளவிட முடியாத பொன்னும் , பசுக்களும், பணிப்பெண்டிரும் குதிரைகளும் மற்றும் பணியாட்களையும் நான் பெறுவேனோ, அந்த திருமகள் ,என்னை விட்டு விலகாதிருக்க அருள வேண்டும்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com