செஞ்சி: சோம சமுத்திரம் சோமநாதர் கோவிலில் திருப்பணிகள் துவங்குவதற்காக திருமுறை முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.

செஞ்சி அருகே சோம சமுத்திரம் கிராமத்தில்ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோமநாதர்கோவில் பாழடைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடப்பதற்காக திருமுறை முற்றோதல் மற்றும் சோமநாதர், தில்லையம்மன், கெங்கையம்மனுக்கு 15ம் ஆண்டு வேள்வி நடந்தது.

இதைமுன்னிட்டுகடந்த 20ம் தேதி காலை 7:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. மறுநாள் மாலை 7 :00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். தொடர்ந்து 22ம்தேதி அதிகாலை 3:00மணிக்கு திருப்பணிகள் துவங்கவும், மழை வேண்டியும் திருமுறை முற்றோதல்நடந்தது. இரவு 10 மணிக்கு அனைத்து கோவில்களில் உள்ள தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்தனர். மாலை 5:00 மணிக்கு வடபுத்தூர் சைவ நெறி திருத்தொண்டர் குருபீடம் இளஞ்செழியன் தலைமையில் சிவாச்சாரியார்கள் தமிழ் முறையில் சிறப்பு வேள்வியும், வழிபாடும் நடத்தினர்.

இரவு 8:00 மணிக்கு கெங்கையம்மன் பூங்கரகம் ஊர்வலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை சோமசமுத்திரம் கிராமமக்கள் செய்தனர்.