திருஆனைக்கா

இறைவர் திருப்பெயர்: நீர்த்தீரள்நாதர், ஜம்புகேசுவரர்.
இறைவியார் திருப்பெயர்: அகிலாண்டநாயகி, அகிலாண்டேசுவரி.
தல மரம்: வெண்நாவல்.
தீர்த்தம் : காவிரி,இந்திரதீர்த்தம், சந்திரதீர்த்தம்.
வழிபட்டோர்: அம்பிகை, சிலந்தி,யானை.

தல வரலாறு

   • பிரமன் திலோத்தமை மேல் காதல் கொண்ட பாவம் தீரும் பொருட்டு பூசித்த தலம்.
   • ஆனை வழிபட்டதால், இத்தலம் இப்பெயர் பெற்றது.
   • இறைவனைப் பூசித்த சிலந்தி, அடுத்தப் பிறவியில் ஆனையேறாத பல மாடக்கோயில்கள் கட்டிய சோழ மாமன்னர் கோச்செங்கட்சோழராக அருள்பெற்ற இடம்.
   • நடராஜர் சந்நிதிக்கு எதிரில் கோட்செங்கட் சோழ நாயனாரின் திருவுருவம் தனிச் சந்நிதியில் அமையப்பெற்றுள்ளது.
   • இஃது கோட்செங்கட் சோழ நாயனார் அவதாரப் பதியாகும்.
    அவதாரத் தலம்	: திருஆனைக்கா.
    வழிபாடு		: லிங்க வழிபாடு.
    முத்தித் தலம் 	: தில்லை (சிதம்பரம்).
    குருபூசை நாள் 	: மாசி - சதயம்.
    

     

   • ஈசன், சித்தராக வந்து திருநீறு அளித்து, அதனைக் கூலியாக்கி, நான்காவது பிராகார மதிற்சுவர் கட்டியதால், அது, திருநீற்றான் மதில் எனப்படுகிறது.
   • சோழ மன்னன் காவிரியில் நீராடும்போது கழன்று விழுந்த ஆரத்தை, இறைவன் திருமஞ்சன நீர் குடத்தின் மூலமாக, தான் ஏற்றார்.
தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் -	1. மழையார் மிடறா, 
					2. வானைக்காவில் வெண்மதி, 
					3. மண்ணது வுண்டரி (கூடற்சதுக்கம்). 

			 2. அப்பர்  -	1. கோனைக் காவிக், 
					2. எத்தாயர் எத்தந்தை, 
					3. முன்னானைத் தோல்போர்த்த. 

			 3. சுந்தரர் -	மறைகள் ஆயின நான்கும்

 

தல மரம் : வெண்நாவல்

 

சிறப்புகள்

   • மிகப்பெரிய திருக்கோயில்.
   • பஞ்ச பூத தலங்களுள் இது அப்புத் தலமாகும்.
   • ஆதிசங்கரர், இங்குள்ள அம்பிகைக்கு இரண்டு ஸ்ரீ சக்கரங்களைச் செய்து, அதைத் தோடாக அணிவித்தார்.
   • பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் ஆகியோர் காலத்து கல்வெட்டுகள் மொத்தம் 154 உள்ளன.

அமைவிடம் அ/மி. ஜம்புகேசுவரர் திருக்கோயில், திருஆனைக்கா, திருச்சிராப்பள்ளி. தொலைபேசி : 0431 – 2230257. மாநிலம் : தமிழ் நாடு இத்தலம் திருச்சிராப்பள்ளி நகரில் உள்ளது. திருச்சிராப்பள்ளி தமிழ் நாட்டின் எல்லா இடங்களிலிருந்தும் பேருந்து மூலமாகவும், இரயில் மூலமாகவும் இணைக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி நகரிலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com