திருக்கடம்பூர் (மேலக்கடம்பூர் / கடம்பைக் கரக்கோயில்)

இறைவர் திருப்பெயர்: அமிர்தகடேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: சோதி மின்னம்மை, வித்யுஜோதி நாயகி.
தல மரம்: கடம்பு.
தீர்த்தம் : சக்தி தீர்த்தம்.
வழிபட்டோர்: முருகப் பெருமான், இந்திரன், சம்பந்தர், அப்பர் .

தல வரலாறு

      • இந்திரன் பூசித்து, அமிர்தம் உண்டாகும்படி வரம் பெற்றதால், இது கரக்கோவில் எனப்படுகிறது.

         

      • ஊரின் பெயர் கடம்பூர். கோவில் -கரக்கோவில் என்பது.

 

தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் - 	வானமர் திங்களும்.
			  2. அப்பர்   -	1. தளருங் கோளரவத்தொடு, 2. ஒருவராய் இரு.

 

சிறப்புகள்

      • கோயில் மூலஸ்தானத்தின் அடிப்பாகம் இரத வடிவில், குதிரைகள் பூட்டிய நிலையில் உள்ளது.

 

      • இதன் கிழக்கே 2-கி.மீ தூரத்தில் கடம்பூர் இளங்கோயில் உள்ளது.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சிதம்பரம் அருகில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து காட்டு மன்னார்குடி வழியாக எய்யலூர் செல்லும் பஸ்ஸில் இத் தலத்தை அடையலாம். தொடர்பு : 09345656982

Facebook Auto Publish Powered By : XYZScripts.com