திருக்கண்ணார்கோயில் (குறுமாணக்குடி)

இறைவர் திருப்பெயர்: கண்ணாயிரமுடையார், கண்ணாயிரநாதர், சஹஸ்ரநேத்ரேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: முருகுவளர்கோதை, சுகந்தகுந்தளாம்பிகை.
தல மரம்: சரக்கொன்றை.
தீர்த்தம் : இந்திர தீர்த்தம்.
வழிபட்டோர்: இந்திரன், சம்பந்தர் .

தல வரலாறு :

      • வாமனாவதாரத்தில் மஹாபலியிடம் மூவடி மண் இரந்து பெற்று உலகளந்த  திருமால் செருக்கை ஒடுக்கி நெற்றியிலிருந்து ரத்தம் இறுத்த சிவபெருமானை வழிபாட்டு அருள் பெற்ற தலமாகையால் குமாணிக்குடி  என்பது  குறுமாணக்குடி என மருவித்தலத்தின் வழங்கும் பெயராயிற்று.

         

      • இந்திரனின் சாபம் இங்கு நீங்கியதாக ஐதீகம்.

 

தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் தண்ணார் திங்கட் பொங்கர

சிறப்புகள் :

      • மூலவர் – சுயம்பு திருமேனி; சற்று உயரமாக உள்ளது. பெயருக்கேற்பத் திருமேனி முழுவதிலும் கண்கள் போன்று பள்ளம் பள்ளமாக உள்ளன.

         

      • திருமணமாகாதோர் இங்கு வந்து சுவாமிக்கு மாலை சார்த்தி வழிபடுதலும், அவ்வாறு வழிபட்டோர் திருமணத்திற்கு பிறகும் இங்கு வந்து மாலை சார்த்துதலும் மரபாக உள்ளது.

அமைவிடம் இந்தியா – மாநிலம் : தமிழ் நாடு வைத்தீஸ்வரன் கோயில் – மயிலாடுதுறை பேருந்துப் பாதையில் ‘பாகசாலை’ என்னும் கைகாட்டி உள்ள இடத்தில் அதுகாட்டும் வழியில் (இடப்பக்கமாக) 3 கி.மீ. சென்றால் ‘கண்ணாயிரமுடையார் கோயில் ‘ என்னும் இத்திருக்கண்ணார் கோயிலை அடையலாம். பேருந்து வசதி உள்ளது. தொடர்புக்கு :- 94422 58085.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com