திருக்கருப்பறியலூர் (தலைஞாயிறு)

 

இறைவர் திருப்பெயர்: குற்றம் பொறுத்த நாதர்.
இறைவியார் திருப்பெயர்: கோல்வளை நாயகி.
தல மரம்: கொகுடி முல்லை.
தீர்த்தம் : இந்திர தீர்த்தம்.
வழிபட்டோர்: வசிஷ்டர், ஆஞ்சநேயர், இந்திரன்.

தல வரலாறு :

   • கொகுடி முல்லையைத் தலக்கொடியாக கொண்டதால் இப் பெயர் பெற்றது.(கருப்பறியலூர் என்பது ஊரின் பெயர். கோயிலின் பெயர் கொகுடிக்கோயில்).

     

   • இறுமாப்புடன் இருந்த இந்திரன், முன் கயிலையில் இறைவர் பூத உருவத்துடன் தோன்றினார். அதனை அறியாத இந்திரன் வச்சிராயுதத்தை அவர் மேல் எறிந்தான். பின் தன் பிழையை உணர்ந்து பொறுக்கவேண்டியதால், இவ்வூர் இறைவன் பெயர் குற்றம் பொறுத்த நாதர் என்றாயிற்று.
தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் -	சுற்றமொடு பற்றவை 
			 2. சுந்தரர்  -சிம்மாந்து சிம்புளித்துச்

 

சிறப்புக்கள் :

   • இக்கோயிலில் சீர்காழி மலைக் கோயிலில் உள்ளது போல் அம்மையப்பரும், சட்டைநாதர் திருவுருவமும் உள்ளது,

     

   • இதனை, மேலைக்காழி எனவும் கூறுவர். 
   • சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.

அமைவிடம் இந்தியா – மாநிலம் : தமிழ் நாடு இஃது வைத்தீசுவரன்கோயில் இரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 8-கி.மீ தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறை, வைதீஸ்வரன்கோயில் ஆகிய இடங்களிலிருந்து தலைஞாயிறு (இத்தலத்தின் இன்றைய பெயர்) செல்ல பேருந்து வசதி உள்ளது. தொடர்புக்கு :- 04364 -258 833.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com
Facebook Auto Publish Powered By : XYZScripts.com