திருக்குரக்குக்கா (திருக்குரக்காவல்)

இறைவர் திருப்பெயர்: குந்தளேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: குந்தளாம்பிகை.
தல மரம்:
தீர்த்தம் : கணபதிநதி.
வழிபட்டோர்: அநுமன் முதலியோர்.

தல வரலாறு

      • இத்தலம் மக்கள் வழக்கில் ‘திருக்குரக்காவல்’ என்று வழங்குகிறது.

         

      • அநுமன் வழிபட்டுப் பேறு பெற்றத் தலம்.

 

தேவாரப் பாடல்கள்		: அப்பர் - மரக்கொக் காமென வாய்

சிறப்புக்கள்

      • அப்பர் மூலத் திருமேனி அழகாகவுள்ளது; அநுமன் மூர்த்தமும் உள்ளது.

         

      • வாயில் முகப்பில் அநுமன் சுவாமியைப் பூசிப்பதுபோல வண்ண ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.

         

      • சுவாமி, அம்பாள் விமானங்கள் ஏகதள உருண்டையமைப்பில் உள்ளன.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு வைத்தீஸ்வரன்கோயில் – திருப்பனந்தாள் சாலையில் ‘இளந்தோப்பு ‘ வந்து; ஊர்த் தொடக்கத்திலேயே உள்ள மருத்துவமனைக் கட்டிடத்திற்குப் பக்கத்தில் செல்லும் (திருக்குரக்காவல்) சாலையில் 3 கி. மீ. உள்ளே சென்றால் கோயிலையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும். (3 கி. மீ. தொலைவான இவ்வுட்பாதைக்கு பேருந்து வசதியில்லை). தொடர்புக்கு :- 04364 – 258 785.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com