திருக்கோலக்கா

இறைவர் திருப்பெயர்: சப்தபுரீஸ்வரர், தாளேஸ்வரர், திருத்தாளமுடையார்.
இறைவியார் திருப்பெயர்: தொனிப்ரதாம்பாள், ஓசை கொடுத்த நாயகி.
தல மரம்: கொன்றை.
தீர்த்தம் : ஆனந்த தீர்த்தம்.
வழிபட்டோர்: அகத்தியர், கண்வர் முதலியோர்.

 

 

தல வரலாறு

      • கைகொட்டிப் பாடிய ஞானசம்பந்தருக்கு இறைவன், திருவைந்தெழுத்து பொறித்த தாளத்தையருள, அதற்குத் தெய்வீக ஓசையை இறைவி தந்து அருள் செய்த தலம். இதன்பொருட்டே இக்கோயில் “திருத்தாளமுடையார் கோயில் ” என்றழைக்கப்படுகிறது.

 

தேவாரப் பாடல்கள்		: 1. சம்பந்தர் - மடையில் வாளை பாய
				  2. சுந்தரர்  -	புற்றில் வாளர வார்த்த

 

சிறப்புக்கள்

      • ஞானசம்பந்தரின் யாத்திரையில் இதுவே முதல் தலம்.
      • பிற்காலத்தில் இப்பகுதியில் தன் ஊமை மகன் பேசும் ஆற்றலைப் பெறவேண்டும் என்று, பிரார்த்தித்துக் கொண்ட தாய் ஒருத்தி, அவ்வாறே இறையருளால் தன் மகன் பேசும் வல்லமை வெற, மகிழ்ந்து, கோயிலுக்குத் தன் காணிக்கையாகச் செய்து தந்துள்ள “பொற்றாளம்” கோயிலில் உள்ளது.
      • சீர்காழியில் திருமுலைப்பால் உற்சவம் நடைபெறும்போது இங்குத் தாளம் வழங்கும் ஐதீகவிழா நடைபெறுகிறது.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சீர்காழிக்குப் பக்கத்தில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். தொடர்புக்கு :- 04364 – 274 175.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com




Facebook Auto Publish Powered By : XYZScripts.com