திருச்சத்திமுற்றம் (சத்திமுத்தம்) கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: சிவக்கொழுந்தீசர்.
இறைவியார் திருப்பெயர்: பெரியநாயகி.
தல மரம்:
தீர்த்தம் : சூல தீர்த்தம்.
வழிபட்டோர்: உமை அப்பர்.

தல வரலாறு

      • இறைவனை உமை வழிபட்டுத் தழுவி முத்தமிட்டதால் ‘சத்தி முத்தம்’ என்று வழங்குகிறது. 
      • அப்பர், தனக்குத் தருவடி தீட்சையருளுமாறு வேண்டிப்பாட, இறைவன் திருநல்லூருக்கு வருமாறு அருளிய சிறப்புடைய பதி. இவ்வாறு அருளிய மூர்த்தியே இங்கு மூலவராக உள்ளார்.

 

 

தேவாரப் பாடல்கள்		: அப்பர் - கோவாய் முடுகி யடுதிறற்.

 

 

சிறப்புகள்

      • மூலவர் பக்கத்தில் தலவரலாற்றுச் சிறப்புடைய – இறைவி சிவலிங்கத்தைக் கட்டித் தழுவி முத்தமிட்ட திருக்கோல உருவத்தைக் கண்டுத் தரிசிக்கலாம். 
      • மூல வாயிலின் முன்னால் ஒருபுறத்தில், சத்தி முத்தம் தரும் தல ஐதீக மூர்த்தி உள்ளார். 
      • சம்பந்தர் இத்தலத்திலிருந்து இறைவன் அருளிய முத்துப்பந்தர் நிழலில் திருப்பட்டீச்சுரம் சென்று வணங்கிப் பதிகம் பாடினார்.
      • கல்வெட்டில் இறைவன் “திருச்சத்தி முற்றம் உடையர், திருச்சத்திவனப் பெருமாள்” எனக் குறிக்கப்படுகிறார். 
      • அக்காலத்தில் கோயில் நிலங்களில் வரிகளை வசூலிக்கும் விதிமுறைகளைப் பற்றியும், விளக்கெரிக்க காசும், ஆடும் அளித்ததையும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. 
      • ( ‘நாரைவிடு தூது ‘ பாடிய சத்திமுற்றுப்புலவர் இவ்வூரினரே.)

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் – ஆவூர் நகரப் பேருந்துகளில் எளிதில் இத்தலத்திற்கு செல்லலாம். தொடர்புக்கு : 9443678575 , 04374 – 267237.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com