திருநின்றியூர்

இறைவர் திருப்பெயர்: மகாலட்சுமீசர், லக்ஷிமிபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: லோகநாயகி.
தல மரம்: விளாமரம்.
தீர்த்தம் : இலட்சுமி தீர்த்தம்.
வழிபட்டோர்: இலக்குமி, பரசுராமர், அகத்தியர் முதலியோர்.

தல வரலாறு

   • மக்கள் கொச்சை வழக்கில் திருநன்யூர் என்றும் வழங்குகிறது. (திருநின்றவூர் என்பது வேறு; இஃது தொண்டை நாட்டில் உள்ளது.) 
   • மன்னன் ஒருவன் கோயிலைக் கட்டும் விருப்புடன் இங்கு வந்து பூமியை இடித்துப் பார்க்கும்போது குருதி பீறிட, தோண்டிப் பார்க்கையில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டு, கோயிலைக் கட்டினான் என்பது தலவரலாறு. இடித்தஇடி பட்டமையால் இன்றும் சிவலிங்கத்தின் மீது உச்சியில் குழி இருப்பதைக் காணலாம்.

 

தேவாரப் பாடல்கள்		: 1. சம்பந்தர் - 	சூலம்படை சுண்ணப்பொடி
				 2. அப்பர்  - 	கொடுங்கண் வெண்டலை
				 3. சுந்தரர் - 	1. அற்றவ னாரடியார், 2. திருவும் வண்மையுந்


மூவர்.

சிறப்புக்கள்

   • பழைய நாளில் இதுவும் கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்றாக விளங்கியது. நூறு ஆண்டுகளுக்கு முன் நகரத்தார் திருப்பணி செய்தபோது இதை இப்போதுள்ள அமைப்பில் மாற்றிக் கட்டிவிட்டதாக சொல்லப்படுகிறது. 
   • இக்கோயிலில் கொடி மரம் இல்லை.
   • பரசுராமர் வழிபட்ட லிங்கம் உள்ளது.
   • மூலவர் சுயம்பு மூர்த்தி; உயர்ந்த பாணம்.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு வைத்தீஸ்வரன்கோயில் – மயிலாடுதுறை சாலையில் இடையில் உள்ள ஊர். மயிலாடுதுறையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. தொடர்புக்கு : 094861 41430.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com
Facebook Auto Publish Powered By : XYZScripts.com