திருப்பதியில் கேட்கும் வெங்கடேச ஸ்தோத்திரம்

பெருமாள்
திருப்பதி தலத்தில் காலையில் நமது காதுகளில் விழுவது சுப்ரபாதம் எனப்படும் திருப்பள்ளி எழுச்சி பாடலாகும். அதன் பின்னர் வெங்கடேச ஸ்தோத்திரம் என்ற பாடல் ஒலிக்கும். பிரசித்தி பெற்ற அதை அருளியவர் மார்க்கண்டேய மகரிஷி ஆவார். அதில் `விநா வேங்கடேசம் ந நாதோ ந நாத..’ என்ற வரிகளை பலரும் அறிவார்கள்.
அதன் அர்த்தமானது ‘உன்னை தவிர வேறு தெய்வமில்லை.. உன்னையே சரணடைகிறேன்..’ என்பதாகும். அவ்வாறு போற்றி வழிபட்ட மார்க்கண்டேய மகரிஷிக்கு வேங்கடவனின் அருள் உடனடியாக கிடைத்ததாக ஐதீகம். திருப்பதி செல்லும் அனைவருமே அவ்வாறு பிரார்த்தனை செய்தால் நமக்கு அவனது அருள் நிச்சயமாக உண்டு. இதை திருமலைவாசன் வேறொரு விதமாக சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது.
Image result for திருப்பதி

‘என்னை கோவிந்தா என்று ஒரு முறை அழைத்தால் உனக்கு நான் கடன்பட்டவன் ஆகிறேன். இரண்டாவது முறை கோவிந்தா என்று அழைத்தால் அந்த கடனுக்கு வட்டி கொடுப்பேன். மூன்றாவதாக கோவிந்தா என்று அழைத்தால் அந்த வட்டிக்கு வட்டி தருவேன்..’ என்று திருவேங்கடவன் சொல்லியிருப்பதாக மகரிஷிகள் அருளியுள்ளார்கள். அதனால்தான் ‘கோவிந்தா..’ என்ற கோஷம் திருமலை முழுவதும் எதிரொலிக்கிறது. குபேரனுக்கு மட்டும் கடன்பட்டவராக இல்லாமல் அவனது நாமத்தை உச்சரிப்பவருக்கும் அவன் கடன்பட்டவனாக ஆவது விசித்திரமான கலியுக ஆன்மிக நியதியாக வேங்கடவன் விஷயத்தில் விளங்கி வருகிறது.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com