திருப்பதியில் வருகிற 12-ந்தேதி ரதசப்தமி விழா

திருப்பதியில் ஆண்டுதோறும் ரதசப்தமி எனப்படும் சூரிய ஜெயந்தி உற்சவம் மிக சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு ரதசப்தமி விழா பிப்ரவரி 12-ந்தேதி நடைபெறுகிறது.

அன்று ஒரே நாளில் 7 வாகன சேவைகளில் ஏழுமலையான் மாட வீதிகளில் பவனி வருகிறார். இதை ஒரு நாள் பிரம்மோற்சவம் என்று தேவஸ்தானம் குறிப்பிடுகிறது. ரதசப்தமியை தரிசிக்க திருப்பதிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ரதசப்தமி அன்று நடைபெறவுள்ள வாகன சேவைகளின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

காலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனம். காலை 9 மணி முதல் 10 மணி வரை சின்னசே‌ஷ வாகனம். காலை 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனம். மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனம். மதியம் 2 மணி முதல் 3 மணி வரை தீர்த்தவாரி. மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்ச வாகனம். மாலை 6 மணி முதல் 7 மணி வரை சர்வபூபால வாகனம்.

இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனம் போன்ற வாகன சேவைகள் நடைபெறுகிறது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com