திருப்பராய்த்துறை

இறைவர் திருப்பெயர்: தாருகவனேஸ்வரர், பராய்த்துறைநாதர்.
இறைவியார் திருப்பெயர்: ஹேமவர்ணாம்பாள், பசும்பொன்மயிலாம்பாள்.
தல மரம்: பராய் மரம் .
தீர்த்தம் : காவிரி.
வழிபட்டோர்: இந்திரன், குபேரன், சப்தரிஷிகள் சம்பந்தர் அப்பர் ஆகியோர்.

தல வரலாறு

      • பராய் மரக்காட்டில் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இத்தலம் ‘பராய்த்துறை’ எனப்படுகிறது. இத்தலத்திற்கு ‘தாருகாவனம்’ என்றும் பெயருண்டு. (பராய் மரம், சமஸ்கிருதத்தில் ‘தாருகா விருக்ஷம்’ எனப்படுகிறது.)

         

      • இறைவன் பிட்சாடனராய்ச் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்கட்கு அருள்புரிந்தார்.

தல மரம் : பராய் மரம்

சிறப்புகள்

      • இங்குள்ள நவகிரகங்களுள் சனிபகவானுக்கு மட்டுமே வாகனம் உள்ளது; ஏனையோருக்கு வாகனமில்லை.

 

      • முதற் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டது இத்திருக்கோயில்.
      • கல்வெட்டில் இத்தலம், “உத்தம சீவிச் சதுர்வேதிமங்கலத்துத் திருப்பராய்த்துறை” என்றும்; இறைவன் பெயர் “பராய்த்துறை மகாதேவர் ” என்றும்; “பராய்த்துறைப் பரமேஸ்வரன்” என்றும் குறிக்கப்படுகிறது.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருச்சி – கரூர் – குளித்தலை செல்லும் பேருந்துச் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். திருச்சி – ஈரோடு இருப்புப் பாதையில் உள்ளது; எலமனூர் புகைவண்டி நிலையத்தில் இறங்கி செல்லலாம். தொடர்பு : 09940843571

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com