திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)

இறைவர் திருப்பெயர்: மாற்றறிவரதர், சமீவனேஸ்வரர், பிரமபுரீசுவரர்.
இறைவியார் திருப்பெயர்: பாலாம்பிகை, பாலசௌந்தரி.
தல மரம்: வன்னி.
தீர்த்தம் : சிலம்பாறு. (பங்குனியாறு, அமலையாறு என்றும் கூறுவர்).
வழிபட்டோர்: பிரமன், லட்சுமி, உமாதேவி முதலியோர்.

தல வரலாறு

   • “பாச்சில் கூற்றத்து ஆச்சிராமம் ஆதலின் பாச்சிலாச்சிராமம் என்று வழங்கப்பெற்றது”; திருவாசிராமம் என்பது மருவி இன்று திருவாசி என்று வழங்குகிறது. 
   • கொல்லி மழவனின் புதல்விக்கு நேர்ந்த ‘முயலகன்’ நோயைச் சம்பந்தர் தீர்த்த பதி. இதனால் நடராசர் திருவடியில், முயலகனுக்குப் பதிலாக பாம்பு உள்ளது. நடராசர் சர்ப்ப நடன மூர்த்தியாக காட்சித் தருகிறார். ( ‘முயலகன் என்பது வலிப்பும் வயிற்று வலியும் வரும் ஒரு வகை நோய்’ )

தேவாரப் பாடல்கள்		: 1. சம்பந்தர் - 	துணிவளர் திங்கள் துளங்கி 
				 2. சுந்தரர் -	வைத்தனன் தனக்கே.

தல மரம் : வன்னி

சிறப்புகள்

   • சுந்தரர் பொன் பெற்றத் தலம். 
   • இத்தல இறைவன், சுந்தரர் தம் பொன்னை மாற்றுக் குறைவதாக உரைத்துக் காட்ட அறிந்த பிரான் – ‘மாற்றறிவரதர் ‘ என்றும்; வன்னிசூழ்ந்த வனத்தில் உள்ளவராதலின் ‘சமீவனேஸ்வரர் ‘ என்றும்; பிரமன் வழிபட்டவராதலின் பிரமபுரீசுவரர் என்றும் விளங்குகிறார். 
   • முதற் கோபுரத்திற்கும் இரண்டாம் பிராகாரத்திற்கும் இடையிலுள்ள மண்டபம் ‘ஆவுடையாப்பிள்ளை மண்டபம் ‘ எனப்படுகிறது. இம்மண்டபத்தூணில் சந்பந்தர், கொல்லி மழவன், புதல்வியின் நோயைத் தீர்த்த சிற்பங்கள் அழகாக உள்ளன.
   • சுவாமி சந்நிதியில் சுந்தரருக்கு பொற்கிழி தந்த ஸ்தபன மண்டபம் உள்ளது. இவ்விடத்தைக் கல்வெட்டு “கிழி கொடுத்தருளிய திருவாசல்” என்ற பெயரால் குறிக்கின்றது. 
   • இங்குள்ள சுந்தரர் மூர்த்தம், இரு கைகளிலும் தாளம் ஏந்திப்பாடும் அமைப்பில் உள்ளது. 
   • இத்தல கல்வெட்டில் “பாச்சில் திருவாச்சிராமத்துப் பெருமானடிகள்” என்று இறைவனின் திருநாமம் குறிக்கப்படுகிறது. 
   • இக்கோயிலுக்கு முதலாம் இராசராசன், சுந்தரபாண்டியன், முதற் குலோத்துங்கன், கிருஷ்ணதேவராயர் ஆகியோர் திருப்பணிகள் செய்துள்ளது தெரியவருகிறது.
   • கி. பி. 1253-ல் சமயபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட ஹொய்சளமன்னனான, வீரசோமேஸ்வரன் காலத்தில் இக்கோயிலுக்கு பதினாயிரம் கலம் நெல் கிடைத்து வந்ததாக கல்வெட்டு மூலம் அறிகிறோம்.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருச்சி – சேலம் பேருந்துச் சாலையில் 12 கி. மீ. தொலைவில் உள்ளது. தொடர்பு : 09443692138

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com