திருமணத்தடை நீங்கி மணவாழ்வு கிட்ட ராமர் கோயில் வழிபாடு

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்கரை கோட்டை ஊராட்சியில், திருமணத்தடை நீக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ராமர் கோயில் உள்ளது. தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்கரை கோ ட்டை ஊராட்சியில், 13ம் நூற்றாண்டு காலத்தில் விஜயநகர பேரரசின் கடைசி மன்னர் சீலப்பநாயக்கர், சென்னப்பநாயக்கர்களால் தென்கரை கோட்டை கோயில் கட்டப்பட்டது. சுமார் 40 ஏக்கரில் அமைந்துள்ள இக்கோயிலில், பழங்கால சிற்பங்களுடன், மண்ணால் ஆன மதில் சுவர்கள், பாதுகாப்பு நலன் கருதி வெளிப்பக்கமாக அகழிகள் காணப்படுகின்றன.

தகடூரை மாவட்டமாக கொண்டு, மொரப்பூரில் தலைவரி வசூல் செய்ய வந்த மன்னர், ஆற்றின் தென்கரையில் உள்ள மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தார். அப்போது ராமர் சீதாதேவியுடன் திருமணக் கோலத் தில் காட்சி அளித்து மறைந்ததாகவும், அதனால் பரவசமடைந்த மன்னர், இந்த இடத்தில் அகழியுடன் கூடிய கோட்டையை உருவாக்கியதும் தெரியவருகிறது. இந்த கோயிலில் நாற்பதுக்கும் மேற்பட்ட தூண்கள் காணப்படுகின் றன. ஒவ்வொரு தூண்களை தட்டும் போதும், ஒவ்வொரு விதமாக ஓசை வரும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது அக்கால சிற்பிகளின் கலைத்திறனுக்கு சான்றாக விளங்குகிறது.

இந்த கோயிலில், சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகளும், பங்குனி மாதத்தில் ராம நவமி, அனுமன் ஜெயந்தி விழாவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நீண்ட நாட்களாக திருமணம் தடைபட்டு இருப்பவர்கள், இந்த கோயிலுக்கு வந்து சுவாமியை வழிபட்டால், திருமண தடை நீங்கி மணவாழ்வு கிட்டும் என்பது இங்குள்ளவர்களின் ஐதீகம்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com