திருவாழ்கொளிப்புத்தூர்

இறைவர் திருப்பெயர்: மாணிக்க வண்ணர், இரத்தினபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: வண்டமர் பூங்குழலி, பிரமகுந்தளாம்பாள்.
தல மரம்: வாகை .
தீர்த்தம் : பிரம தீர்த்தம்.
வழிபட்டோர்: திருமால், அர்ச்சுனன், துர்க்கை, வண்டு, வாசுகி.

தல வரலாறு :

      • இறைவன் அர்ச்சுனனை ஆட்கொள்ளவேண்டி, அவன் தன் வாளாயுதத்தை ஒளித்துவைத்திருந்த இடத்தில் வாசுகியை ஏவி, அவ்வாளை ம¨றக்கும்படிச் செய்தார். அர்ச்சுனன், அவ்வாள் வேண்டி இறைவனையும், வாசுகியையும் வழிபட்டு வாளைப்பெற்றான். வாசுகி இருந்த இடம் புற்றாதல¡ல், இது வாளளிபுற்றூர் எனப்படுகிறது.

 

தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் - 	1. பொடியுடை மார்பினர், 2. சாகை ஆயிரமுடையார்.
			  2. சுந்தரர்   -	தலைக்கலன் தலைமேல்

சிறப்புகள்

      • துர்க்கைக்கு வழிபாடு இத் தலத்தில் சிறப்பாகும்.
      • வாசுகிக்கு ஆண்டுதோறும் அபிஷேகம் நடைபெறுகிறது.

அமைவிடம் இந்தியா – மாநிலம் : தமிழ் நாடு இது, இன்று திருவாளப்புத்தூர் எனப்படுகிறது. மயிலாடுதுறை – சிதம்பரம் இரயில் பாதையில், நீடூர் இரயில் நிலையத்திற்கு வடக்கே 9-கி.மீ. தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறை, மணல்மேடு ஆகிய இடங்களிலிருந்து பஸ் வசதி உள்ளது. தொடர்புக்கு :- 98425 38954 , 04364 – 254 879.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com




Facebook Auto Publish Powered By : XYZScripts.com