திருவைகாவூர் கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: வில்வவனேஸ்வரர், வில்வவனநாதர்.
இறைவியார் திருப்பெயர்: சர்வஜனரக்ஷகி, வளைக்கைநாயகி.
தல மரம்: வில்வம்.
தீர்த்தம் : எமதீர்த்தம்.
வழிபட்டோர்:

 

தல வரலாறு

      • சிவராத்திரி நாளில் புலிக்குப் பயந்து வில்வ மரத்தின்மேல் ஏறியிருந்த வேடன் இரவெல்லாம் வில்வத்தைப் பறித்துப்போட்ட வண்ணம் தூங்காமல் இருக்க, காலையில் இறைவன் வெளிப்பட்டு அருள்புரிந்த அற்புதத் தலம்.

         

      • இங்கே நந்தி வாயிலை (கிழக்கு) நோக்கி திரும்பியிருப்பதைக் காணலாம். இத்தல வரலாறாகிய வேடன் நிகழ்ச்சி தொடர்பாக – அதாவது வேடனைப் பிடிக்க எமன்வர, நந்தியும், துவாரபாலகர்களும், ஏனையோரும் தடுக்க, மீறி வருமவனைத் தடுத்து விரட்ட இவ்வாறு திரும்பி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இக்கோயிலில் துவாரபாலகர்கள், நவக்கிரகங்கள் இல்லை எனப்படுகிறது.

தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - கோழைமிட றாககவி.

தல மரம் ; வில்வம்

சிறப்புகள்

      • சிவராத்திரிக்கு சிறப்புடைய தலம்.

         

      • இத்தலத்திற்கு வில்வவனம் என்றும் பெயருண்டு.

      • உள்கோபுர வாயிலில் வேடன் நிகழ்ச்சி சுதையால் சித்தரிக்கப்பட்டுள்ளது.
      • இக்கோயிலில் முருகன் வீற்றிருக்கும் மயிலின் முகம் திசை மாறியுள்ளது.

         

      • துர்க்கைக்கு எதிரில் இரு சண்டேஸ்வரர் திருமேனிகள் உள்ளன.

      • மூலவர் சுயம்பு மூர்த்தி .

         

      • இத்தலத்தில் சிவராத்திரியன்று நான்காம் யாமத்தில் வேடன், வேடுவச்சி, இறைவன் காட்சி தரும் ஐதீகம் புறப்பாடு நடைபெறுகின்றன.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சுவாமிமலையிலிருந்து ‘நாகுகுடி’ செல்லும் கிளைப்பாதையில் ‘நாகுகுடி’ சென்று, அங்கிருந்து திருவைகாவூர் செல்லும் பாதையில் சென்று இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை வழியாகத் திருவைகாவூருக்கு நகரப் பேருந்துகள் செல்கின்றன. தொடர்பு : 09443586453, 09655261510.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com