தீபாவளி தின விரத பூஜைகள்

தீபாவளித் திருநாள் பண்டிகையாகக் கொண்டாடப்பட்டாலும், அந்த நாளில் சில சிறப்பு வழிபாடுகளைச் செய்வது நல்ல பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை. அந்த பூஜைகள் விபரம் வருமாறு:-

மகாலட்சுமி பூஜை- தீபாவளி திருமகளின் அவதார நாள் என்பதால், அன்று மகாலட்சுமி பூஜை செய்வது சிறப்பானது. மகாலட்சுமி படத்தினை அலங்கரித்துவைத்து, தூப தீப ஆராதனைகள் செய்யுங்கள். சர்க்கரைப் பொங்கல் நிவேதியுங்கள். மகாலட்சுமி துதிகளைச் சொல்லுங் கள். மனதார வேண்டுங்கள. திருமணம் கைகூடும். மங் களங்கள் சேரும். இதன் பயனாக கூடுதலாக லட்சுமி கடாட்சமும் கிட்டும்.

குபேர பூஜை : செல்வத்தின் அதிபதியாக குபேரன் பொறுப்பேற்ற நாள் தீபத் திருநாள். குபேரன் படத்தின் இருபுறமும் விளக்கேற்றி வைத்து, இனிப்பு பலகாரஙகளை நிவேதனம் செய்து வணங்குங்கள். செல்வமகள் உஙகள் இல்லம் தேடி வருவாள்.

கேதார கவுரி பூஜை : பரமசிவன் பார்வதி படத்தை வைத்து வழிபட வேண்டிய பூஜை அர்த்த நாரீஸ்வரர் படத்துக்கு கூடுதல் சிறப்பு. இதனால் தம்பதியர் ஒற்றுமை கூடும். இல்லற வாழ்வு சிறக்கும்.

கோ பூஜை : பசுவின் உடலில் சகல தேவர்களும் இருப்பதாக ஐதீகம். வாழ்வு சிறக்கவும், வம்சம் தழைக்கவும் தீபாவளி தினத்தில் கோ பூஜை செய்வது சிறப்பு.

சத்யபாமா பூஜை : பூமா தேவியின அம்சமான சத்யபாமாவே கிருஷ்ணருடன் சென்று நரகாசுரனை அழித்தாள். எனவே சத்யபாமாவை வீரலட்சுமியாக பாவித்து வழிபடும் பழக்கம் வட இந்தியாவில் உளளது. வாழ்வில் வரும் தடைகள் யாவும் இந்த பூஜை யால் நீங்கும்.

ஹரிஹர பூஜை : கிருஷ்ண பட்ச சதுர்த்தி, சிவனுக்குரிய மாத சிவராத்திரி. அன்று இரவு முழுக்க கண்விழித்து இருந்து மறுநாள் நாரகாசுரனை அழித்தார் கிருஷ்ணர். எனவே சிவ விஷ்ணு வழிபாடு செய்ய ஏற்ற நாளாக தீபாவளி கரு தப்படுகிறது. இந்த வழிபாட்டால் குடும்பத்தில் அமைதி உண்டாகும். ஆனந்தம் பெருகும்.

முன்னோர் வழிபாடு : துலாமாத அமாவாசை தினம் முன்னோர் வழிபாட்டிற்குரிய முக்கியமான தினமாகக் கருதப்படுகிறது. அவரவர் இல்லத்து முன்னோரை நினைத்து இயன்ற அளவு அன்னதானம் செய்வதும், ஆடை தானம் செய்வதும் இல்லத்து இனிமையை இரட்டிப்பாக்கும்.

குலதெய்வ பூஜை : எத்தனை எத்தனை தெய்வங்களை வழிபட்டாலும் குலதெய்வ வழிபாடே முதன்மையானது. வாழ்வில் நாம் அனைத்து பலன்களையும் பெற குலதெய்வத்தின் ஆசி வேண்டும். எந்த ஒரு பூஜை அல்லது பண்டிகையின் போதும் முதலில் அவரவர் வழக்கப்படி குலதெய்வத்தைக் கும்பிட வேண்டும். குலதெய்வத்தைக் கும்பிட்ட பின் இயன்ற பூஜை, விரதத்தைக் கடைப்பிடியுங்கள். எல்லா நன்மையும் உங்களைத் தேடிவரும்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com