தைப்பூச திருவிழா: பழனி கோவிலில் நாளை திருக்கல்யாணம்

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்விழாவின் சிறப்பே பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்து முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவதுதான்.

இந்த வருடத்துக்கான தைப்பூச திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக நடந்து வந்த வண்ணம் உள்ளனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச் சியான திருக்கல்யாணம் நாளை இரவு 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு வெள்ளித் தேரில் முத்துக்குமார சுவாமி, வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மறு தினம் (21-ந் தேதி) மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. அன்று பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க திருத்தேர் 4 ரத வீதிகளில் உலா வந்து மீண்டும் நிலையை அடையும்.

தைப்பூச திருவிழா முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதால் பழனி நகரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இது தவிர திண்டுக்கல் – பழனி சாலை, மதுரை சாலை, தாராபுரம் சாலை என திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டம் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது.

பக்தர்களுக்கு தேவை யான அனைத்து வசதிகளும் கோவில் நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்பினர் சார்பில் ஏற்படுத்தி தரப்பட் டுள்ளது. இது தவிர வழி நெடுகிலும் பக்தர்களுக்காக அன்னதான முகாம்களும், மருத்துவ குழுவினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாத யாத்திரை பக்தர் களுக்கு உதவுவதற்காக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர்.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நாளை முதல் திண்டுக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேனியில் இருந்து பழனி வழியாக கோவை செல்லும் பஸ்கள் பாத யாத்திரை பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தால் செம்பட்டி சந்திப் பில் இருந்து பழனி பைபாஸ், ரெட்டி யார்சத்திரம், மூலச்சத்திரம், ஒட்டன் சத்திரம், கள்ளி மந்தயம் சந்திப்பு, புதிய தாராபுரம் ரோடு வழியாக பழனி செல்ல வேண்டும். கூட்டம் அதிகமாக இருந்தால் செம்பட்டி சந்திப்பில் இருந்து கன்னிவாடி, மூலச் சத்திரம், ஒட்டன் சத்திரம், கள்ளிமந்தயம் சந்திப்பு வழியாக பழனி செல்ல வேண்டும்.

மதுரையில் இருந்து பழனி செல்லும் பஸ்கள் திண்டுக்கல் – பழனி பைபாஸ் ரோடு சென்று ரெட்டியார்சத்திரம், ஒட்டன் சத்திரம், கள்ளிமந்தயம் சந்திப்பு, தொப்பம்பட்டி, புது தாராபுரம் ரோடு வழியாக பழனி செல்ல வேண்டும்.

தேனி, மதுரையில் இருந்து கோவை செல்லும் லாரிகள் செம்பட்டி சந்திப்பில் இருந்து வத்தலக்குண்டு பைபாஸ், பழனி பைபாஸ், தாடிக்கொம்பு, அகரம் ரோடு, இடையகோட்டை, கள்ளி மந்தயம், தாராபுரம் வழியாக கோவை செல்ல வேண்டும்.

கேரளா, திருப்பூர், கோவையில் இருந்து மதுரை செல்லும் லாரிகள் கோவையில் இருந்து மதுரை செல்லும் கார்கள், பஸ்களில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com