நற்பலன்கள் கிடைக்க புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு

புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையையும் புனித நாளாகக் கருதப்படுகிறது. திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளுக்கு உரிய தினமாகவும் புரட்டாசி சனிக்கிழமைகள் கருதப்படுகின்றன. புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு பல நலன்களையும் வளங்களையும் வாரி வழங்குகிறார் திருப்பதி ஏழுமலையான். காலையில் எழுந்து நீராடி நெற்றியில் மதச் சின்னத்தை அணிய வேண்டும். சுத்தமாக ஆடை அணிந்திருத்தல் அவசியம். பூஜை அறையில் வெங்கடாஜலபதியின் உருவப்படம் அல்லது உருவச் சிலையை வைத்து முன்னே அமர வேண்டும். விளக்கை ஏற்றி, படத்திலும், விளக்கிலும் அலமேலு மங்கையுடன் கூடிய வெங்கடாஜலபதியை வணங்க வேண்டும்.

துளசியால் அர்ச்சனை செய்வது அவசியம். பின் தூபதீபம் காட்ட வேண்டும். பால், பழம், பாயாசம், கற்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனப் பொருட்களாக படைக்க வேண்டும். வெங்கடாஜலபதியின் மகிமை பற்றிய நூல்களைப் படித்து ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். இதேபோல் மாலையிலும் வழிபாடு செய்ய வேண்டும். அன்று மாவிளக்கு ஏற்றி வெங்கடேசப் பெருமாளை வழிபட வேண்டும். மாவினாலேயே விளக்கு போல செய்து அதில் நெய்விட்டு தீபம் ஏற்றி வெங்கடேசப் பெருமானை வழிபட வேண்டும். மாவிளக்கு ஏற்றி வைத்த பிறகு அந்த விளக்கு தணியும் போது கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுக்க வேண்டும். மாவிளக்கு ஏற்றி பூஜை செய்யும் போது சர்க்கரைப் பொங்கல், வடை படைக்க வேண்டும். புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு நாளில் திருப்பதிக்குச் சென்று தமது காணிக்கையைச் செலுத்தி வரலாம்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com