நெல்லிக்குப்பம் வேண்டவராசி அம்மன் கோவில் ஆடி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பம் கிராமத்தில் அருள்மிகு வேண்டவராசி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று 58 வது ஆண்டு ஆடிப்பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில், காலை 8 மணிக்கு மூலவர் அம்மனுக்கு 108 சங்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பக்தர்கள் பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக வந்தனர். அதனைதொடர்ந்து, உற்சவர் அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு செய்யப்பட்ட அபிஷேகத்தை பார்த்தனர். மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு அம்மனின் திருவீதியுலா நடைபெற்றது. சிறப்பாக நடைபெற்ற ஆடி விழாவில் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வேண்டவராசி அம்மனை வழிபட்டனர். ஆடி விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

சிறப்பு அலங்காரத்தில் நெல்லிக்குப்பம் வேண்டவராசி அம்மன்.