பலன் தரும் ஸ்லோகம் : (எல்லா வகை ஆபத்துகளும் அகல…)

கௌஸல்யாஸுத தாடகா மதமகத்ராதர் முனிஸ்த்ரீஹி
சின்னேஷ்  வாஸன ஜானகீவ்ருத வனாவாஸின் கராத்யந்தக
மாரிசக்ன ஹனூமதீச ரவி  ஜார்த்திச் சேத பத்தாம்  புத்தே
ஸேனா ப்ராத்ரு  ஸமேத ராவணாரிபோ ஸீதேஷ்ட ராமா வமாம்
வாதிராஜர் அருளிய க்ருஷ்ண ராமாவதார சரிதரத்ன ஸங்க்ரஹம்

பொதுப்பொருள்: 
கோசலையின் புதல்வரே, தாடகையை அழித்தவரே, விஸ்வாமித்திரரின் யாகத்தைக் காத்தவரே, அகலிகையின் சாபத்தைப் போக்கியவரே, சிவதனுசு எனும் வில்லை முறித்தவரே, சீதையின் கணவரே, காட்டில் வசித்தாலும் கலங்காதவரே, கரதூஷணர்களைக் கொன்றவரே, மாரீசனை வதைத்தவரே, அனுமனின் தெய்வமே, சூரியனின் மகனான சுக்ரீவனின் மனக்கவலையைப் போக்கியருளியவரே, வானர சைன்யத்துடனும் தம்பி லட்சுமணனுடனும் திகழ்பவரே, ராவணனை வதம் செய்தவரும் சீதைக்குப் பிரியமானவருமான ராமச்சந்திர மூர்த்தியே, நமஸ்காரம்.

(இத்துதியை தினமும் பாராயணம் செய்து வந்தால் எவ்வகையிலும் வரக்கூடிய ஆபத்துகள் நெருங்காமல் விலகிவிடும்.)

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com