பலன் தரும் ஸ்லோகம் : (எல்லா துன்பங்களும் விலக, உடல் ஆரோக்யம் பெற…)

Future News slogam

கார்த்தவீர்யகுரும் மத்ரிதனூஜம்
பாதனம்ரசிர ஆஹிதஹஸ்தம்
ஸ்ரீதமுக்யஹரிதீச்வரபூஜ்யம்
தத்ததேவமனிசம் கலயாமி
சிருங்கேரி சந்த்ரசேகரேந்த்ர பாரதி சுவாமிகள்
அருளிய தத்தாத்ரேயர் ஸ்லோகம்

பொதுப் பொருள்:

கார்த்தவீர்யாஜுனனின் ஆசானும், அத்ரி முனிவரின் புத்திரருமான தத்தாத்ரேயரை நமஸ்கரிக்கிறேன். அவர் பாத கமலங்களில் சரணடையும் பக்தர்களின் சிரசில் கை வைத்து நம் சக்தியை அளிப்பவரும், குபேரன் முதலிய அஷ்டதிக் பாலகர்களால் பூஜிக்கப்படுபவரும், தேவருமான தத்தாத்ரேயரை நான் எப்போதும் தியானிக்கிறேன்.
ஒவ்வொரு வியாழக்கிழமைகளில் இந்த துதியை ஜெபம் செய்து வர துன்பங்கள் எல்லாம் விலகும். ஆரோக்யம் கூடும்.)